விடியற்காலை 5 மணி. மார்கழி மாத தொடக்கம். குளிருக்கு இதமாய் போர்வையை கழுத்து வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான் வினோத். அவனுக்கு அருகில் போர்வைக்குள் சுருண்டு கிடந்தான் மகேஷ். வார விடுமுறை என்றாலே 10 மணிக்கு முன்பு எழுந்திருப்பதில்லை என்ற சபதம் கொண்டவர்கள் இருவரும். ஆனால் என்றும் இல்லாத விதமாய் வினோத்திற்கு 5 மணிக்கே விழிப்பு தட்டி விட்டது. புரண்டு புரண்டு படுத்தவன் எழுந்து உட்கார்ந்தான். அருகில் படுத்திருந்த மகேஷை சில நொடிகள் வெறித்துப் பார்த்துவிட்டு அவனை உசுப்பினான். கண்களை மிகவும் பிரயத்தனப்பட்டு திறந்த மகேஷ் கொஞ்சம் சலிப்பு கலந்த குரலில் கேட்டான்.
"டேய்.. என்னடா..?"
"எழுந்திரு.. டீ சாப்ட போலாம்.."
"மணி என்ன..?"
"5.30.."
"டேய்.. இந்த ரெண்டு நாள் தாண்டா நிம்மதியா ரொம்ப நேரம் தூங்க முடியும்.. அத ஏண்டா கெடுக்குற..?"
"தூக்கம் வரல மச்சி.. வா போயிட்டு வரலாம்.."
"உன்கூட குடும்பம் நடத்துறது ரொம்ப கஷ்டம்டா.." என எழுந்து கொண்டான்..
இருவரும் பிரஷ் செய்து கொண்டு பைக்கில் டீக்கடை நோக்கி விரைந்தார்கள்.
குளிருக்கு இதமாய் டீத்தேடி வந்த கூட்டத்தில் சிறிது நேரம் செலவழித்து டீ வாங்கிக்கொண்டு இருவரும் அருகே இருந்த மரத்தடிக்குப் போய் நின்றார்கள். மகேஷ் எதுவும் பேசாமல் டீயைப் பருகத் தொடங்கினான். வழக்கம் போல வினோத்தே பேச்சைத் ஆரம்பித்தான்.
"மச்சி.. நைட்டு அவ என் கனவுல வந்தாடா.."
"அதனால தான் என்னை கட்டிப் புடிச்சி தூங்குனியா..?"
"அப்டியா.. உன்ன கட்டிப் புடிச்சேனா..?"
"அஹன் ஆசையப் பாரு.. சும்மா சொன்னேன்.."
"டேய்.. ஏன்டா.." சலித்துக் கொண்டே தொடர்ந்தான் வினோத்.
"அப்போல இருந்து அவ ஞாபகமாவே இருக்குடா.. அதான் தூக்கமே வரல.."
"இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.. வீட்டுக்கு போய் அம்மா அப்பாவ பாத்து எவளோ நாள் ஆச்சி..?"
"மச்சான்.. அது வேற டிப்பார்ட்மெண்ட் இது வேற டிப்பார்ட்மெண்ட்.."
"ஓ.. அப்டிங்களா"
"ஆமா டா.."
"மச்சான்.. ஒனக்கு ஒண்ணு தெரியுமா..? அந்த பொண்ண நீ லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து எங்கிட்ட வேற எந்த விஷயமும் நீ பேசுறதே இல்ல.. அந்த பொண்ண பத்தி மட்டும் தான் பேசுற.."
அப்போது தான் அதை உணர்ந்தான் வினோத். கொஞ்சம் வெட்கமாக இருந்தது. இருப்பினும் சமாளிக்க ஆரம்பித்தான்.
"மச்சான்.. அவளப் பத்தி யார்கிட்டயாவது பேசிட்டே இருக்கணும்னு தோணுது.. நீ தான் என் உயிர் நண்பேன்.. அதெல்லாம் உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்டடா சொல்றது.."
"போதும்.. ரொம்ப நக்காத.. நெஞ்சு ஈரமாயிடிச்சி.."
வழிந்தான் வினோத்.
"சரி என்ன ஐடியால இருக்க நீ.. பர்ஸ்ட் லவ்வ சொல்லிட்டு ஒதுங்கிடுறேன்னு சொன்ன.. இப்போ என்னாடான்னா பிரென்ட்டா பழகுனா அந்த பொண்ண புடிக்காம போய் ஒதுங்கிடுவேணு சொல்ற.. ஏன் இப்டி குழப்பிட்டு இருக்க.."
"மச்சான்.. நானே குழம்பிப் போயி தான் இருக்கேன்.. அவள பாக்காத வரைக்கும் ஒரு மாதிரியும் பாத்தப்புறம் வேற மாதிரியும் மைண்ட் யோசிக்குது.."
"சுத்த மானங்கெட்ட குடிகார மைண்டா இருக்கும் போல.."
இருவரும் சிரித்துக் கொண்டார்கள். காலி க்ளாஸையும் டீக்கு பணத்தையும் கொடுத்துவிட்டு அறைக்கு வந்து சேர்ந்தார்கள்.
உன்னையும்
என்னையும்
பிரித்திடும்
சனிகளையும்
ஞாயிறுகளையும்
காலண்டரில்
இருந்து முதலில்
முற்றிலும்
அழித்திட வேண்டும்..!!
என்னையும்
பிரித்திடும்
சனிகளையும்
ஞாயிறுகளையும்
காலண்டரில்
இருந்து முதலில்
முற்றிலும்
அழித்திட வேண்டும்..!!
எதுகை மோனை சரியாக இருக்கிறதா என பேருந்து நிறுத்தத்தில் நின்று யோசித்துக் கொண்டிருந்தான் வினோத். அது சரியாக ரேகா வரும் நேரம். அவளை எதிர்பார்த்து தான் அவன் அங்கே காத்திருக்கிறான் என்பதை உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.
பேருந்தில் இருந்து இறங்கியவளை உடனே அடையாளம் கண்டுகொண்டு அருகில் ஓடினான்.
"ஹாய் ரேகா.."
குரல் கேட்டு திரும்பியவள் அவனை அங்கே எதிர்பார்க்காததால் கொஞ்சம் ஆச்சர்யத்தை முகத்தில் காட்டியபடி,
"ஹாய்.. என்ன இங்க.." என்றாள்.
"நானும் இப்போ தான் பஸ்ஸ விட்டு ஏறங்குனேன்.."
"அப்படியா..?"
"ஆமா.."
"அதெப்படிங்க.. கேன்டீன்லயும் ஆக்சிடெண்டலாப் பாத்துக்குறோம்.. இங்கயும் அதே மாதிரி ஆக்சிடெண்டலாப் பாத்துக்குறோம்.. ஆச்சர்யமா இருக்குங்க எனக்கு.."
அவள் குரலில் இருந்த ஸர்க்காசம் வினோத்தை கொஞ்சம் சங்கடப்படுத்தியது. பேசிக் கொண்டே அவள் நடக்க வினோத்தும் அவளோடு சேர்ந்து நடந்தான்.
"சரிங்க.. உங்களப் பாத்து பேச தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.."
"ஹ்ம்ம்.. இங்க பாருங்க வினோத்.. நான் பர்ஸ்ட்டே சொல்லிட்டேன்.. எனக்கு இந்த லவ்ல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லன்னு.. நீங்க "மொதல்ல பிரெண்டா பழகலாம்.. அப்டியே பேசி பேசி இம்ப்ரெஸ் பண்ணி என்னை லவ் பண்ண வைக்கலாம்.." அப்டிங்கிற ஐடியால இருந்தீங்கனா இப்பவே சொல்லிடுறேன்.. உங்களுக்கு தான் டைம் வேஸ்ட்.. அந்த நேரத்துல வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க.."
எனக் கூறிவிட்டு வேக நடைப்போட்டு அவள் நடக்கத் தொடங்க வினோத் அங்கேயே நின்று கொண்டான்.

முன்பே சொன்னது தான். ஆனால் இந்த முறை மிகத் தெளிவாக தீர்மானமாக சொல்லிவிட்டாள். அவனுக்கும் அவள் தன்னை காதலிப்பாள் எனும் நம்பிக்கை இல்லை. இருப்பினும் அவளோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் தன்னால் முடிந்த முயற்சிகளை செய்து கொண்டிருந்தான். அவளிடம் பேசுவதை எப்போதும் மதனிடம் பகிர்ந்து கொள்ளும் வினோத் இதனை சொல்லவில்லை. மதனுக்கும் வேலை இருந்ததால் வினோத்திடம் பேச்சேதும் கொடுக்கவில்லை. அப்போது PP என்கிற பிரபுமதனிடம் வந்து பேச்சு கொடுத்தான்.
"மச்சான்.. JavaScript நல்லா தெரியுமா..?"
"ஹ்ம்ம்.. தெரியும்டா.. ஏன்.."
"இல்ல.. ஒர்க் பண்ணிட்டு இருக்குற பேஜ்ல சின்ன இஸ்யூ.. வந்து பாக்குறியா..?"
"சரி வரேன்.." என மதன் பேசிக் கொண்டிருக்கும் போதே பிரபுவின் செல்போன் சிணுங்கியது. திரையை பார்த்தவன் சலித்துக் கொண்டே ஆன் செய்தான்.
"மோகனப்ரியா.. நான் தான் கால் பன்றேனு சொன்னேல.. அதுக்குள்ள என்ன.. ஒர்க்ல இருக்கேன்டா.. அப்றம் பேசுறேன்.. சொன்னா கேக்கணும்.. இங்க பாரு.. அழ கூடாது.." இடைவெளி விடாமல் பேசிக் கொண்டிருந்த பிரபுவை அழைத்த மதன், "மச்சான் PP.. நீ வேணா அந்த பக்கம் போய் கடல போடுறியா..?"
"ஏன் மச்சான்..?"
"எரிச்சலா இருக்கு.. அதான்.."
"ஓ.. வயித்தெரிச்சலா.. சரி மச்சான்.. அப்றம் வரேன்.. மோகனப்ரியா.. சொல்லுடி.." எனக் கூறிக் கொண்டே இடத்தை விட்டு நகர்ந்தான் PP பிரபு.
வினோத்திடம் திரும்பி "இவன் வேற என்னை ரொம்ப டார்ச்சர் பண்றான்டா.." என்றான் மதன். வினோத் பதிலேதும் கூறாமல் சிரித்தான்.

உடனடியாக முடிக்க வேண்டிய வேலைகளை செய்துவிட்டு கேன்டீன் செல்வதற்காக எழுந்தான் வினோத். ரேகா பிரேக் வரும் நேரம். உடன் மதனை அழைத்துக் கொள்ளவில்லை. கேன்டீன் உள்ளே நுழைந்தவுடன் ஒவ்வொரு முகத்தையும் அலசினான். இன்றும் தனியாக ஓரமாக ஒரு டேபிளில் அமர்ந்திருந்தாள் ரேகா. சின்ன தயக்கத்துடன் அவளை நோக்கி நடந்தான். டேபிள் அருகே அவன் நெருங்கியவுடன் நிமிர்ந்து பார்த்த ரேகா சலித்துக் கொண்டாள்.
"ப்ச்.." என்ற சத்தம் போதுமானதாக இருந்தது அவளின் மனநிலையைப் புரிந்து கொள்ள. அவளுக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.
"ரேகா.. நான் சொன்ன மாதிரி அதுக்கப்புறம் லவ் அது இதுன்னு உங்ககிட்ட பேசவே இல்லையெங்க.. அப்றம் ஏன் என் மேல கோவப்படுறீங்க..?"
நிமிர்ந்து அவனை ஒரு பார்வைப் பார்த்தாள்.

சுவாசிக்க
மறந்து
போனேன்..
உன்
விழிகளின்
கதிர்வீச்சுகள்
என்னில்
இறங்கிய பொழுது..!!
மறந்து
போனேன்..
உன்
விழிகளின்
கதிர்வீச்சுகள்
என்னில்
இறங்கிய பொழுது..!!
"இப்டியெல்லாம் பாக்காதடி முட்டக்கண்ணி.. அப்றம் ஜென்மத்துக்கும் உன்ன மறக்க முடியாது.." என மனதுக்குள் அவளைத் திட்டினான்.
"ஆமா.. நீங்க பேசல.. ஆனா உங்க ஆக்டீவிட்டீஸ் எல்லாம் பாக்க அப்டி தான் இருக்கு.."
"உங்க கிட்ட பேசணும்னு முன்னாடியே சொல்லி தானேங்க பிரெண்ட்ஸ் ஆனோம்.. நான் சொன்னத மீறி மறுபடியும் லவ் பத்தி பேச்செடுத்தா அப்போ என் மேல கோவப்படுங்க.. பேசாம போங்க.. ஆனா அதுக்கு முன்னாடி இப்டி பண்ணா என்னங்க நியாயம்.."
"ஹலோ.. நீங்க பண்ண காரியத்துக்கு என்னை ப்ளேம் பண்ணாதீங்க.."
"அய்யோ.. உங்கள ப்ளேம் பண்ணலங்க.. ஓக்கே.. ஸாரி.. இனிமே பஸ் ஸ்டாப்ல எல்லாம் வெய்ட் பண்ண மாட்டேன் போதுமா..? அட்லீஸ்ட் கேன்டீன்லயாவது வந்து பேசலாமா..?"
சில நொடிகள் அமைதியாக இருந்தவள் "சரி" என்பதைப் போல் தலையை மட்டும் ஆட்டினாள்.
"சரி.. உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா..?"
"என்ன..?"
"ஏன் உங்களுக்கு லவ்ல இன்ட்ரஸ்ட் இல்ல.. ஏதாவது பேட் எக்ஸ்பீரியன்ஸ்..?"
"என்ன சினிமால வர மாதிரி பிளாஷ்பேக் எதிர்பாக்குறீங்களா..?"
"மே பி இருக்கலாம்ன்னு தான் கேட்டேன்.."
"அந்த மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லங்க.."
"பின்ன ஏன் லவ் வேண்டாம்னு இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கீங்க..?"
"கண்டிப்பா சொல்லியே ஆகனுமா..?"
"தெரிஞ்சிக்கிட்டா நிம்மதியா இருக்கலாம்ல.."
சிரித்தாள் ரேகா.
"சரி சொல்றேன்.. எனக்கு என் அப்பா அம்மாவ ரொம்ப புடிக்கும்.. நம்ம லைஃப்ல ரொம்ப முக்கியமான ஒரு ஸ்டேஜ்னா அது மேரேஜ் தான்.. அப்படிப்பட்ட முக்கியமான அந்த விஷயத்தை பேரண்ட்ஸ் விருப்பப்பட்ட மாதிரி பண்ணிக்குறது தான் நாம அவங்களுக்கு கொடுக்குற பெரிய சந்தோஷம்.. அந்த சந்தோஷத்தை என் அப்பா அம்மாக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன்.. அதான்.."
ரேகா சொல்லி முடித்த சில நொடிகளுக்கு பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தான் வினோத். மனதுக்குள் ஒரு கவிதை முளைத்துக் கொண்டிருந்தது.

உன்னை
வெறுத்து
விலகிட
விரும்புகிறேன்..
அதற்காகவேனும்
ஒரு காரணம்
கொடு
பெண்ணே..!!
வெறுத்து
விலகிட
விரும்புகிறேன்..
அதற்காகவேனும்
ஒரு காரணம்
கொடு
பெண்ணே..!!
"ஹலோ.. என்ன நீங்க அடிக்கடி ஸ்லீப் மோடுக்கு போய்டுறீங்க..?" என அவனது கவனம் களைத்தாள் ரேகா.
"ஸாரி ஸாரி.. வேற யோசனை.." சமாளிக்க முயன்றான் வினோத். சுயநினைவு திரும்பியவுடன் பேசினான்.
"சான்ஸே இல்லைங்க.."
"எது.."
"உங்க மேரேஜ் பத்தின டிசிஷன்.. ரொம்ப பெரிய விஷயம்.."
"என்னங்க.. இது என்னங்க பெரிய விஷயம்..?"
"கண்டிப்பா இது பெரிய விஷயம்ங்க.. ஏன்னா அவங்க மேரேஜ் பண்ணி வச்சிட்டு போயிடுவாங்க.. பட் நீங்க தான் அந்த லைஃப்ப எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழணும்.. அப்படி இருக்கும் போது கூட உங்க பேரெண்ட்ஸ் சந்தோஷம் தான் முக்கியம்ன்னு நினைக்கிறீங்க பாத்தீங்களா.. சிம்ப்ளீ கிரேட்.."
"ஹலோ.. நீங்க என்னமோ கலாய்க்குற மாதிரி தெரியுது.."
"ச்சேச்ச இல்லல்ல.. சீரியஸா சொல்றேன்.. ரொம்ப பெரிய விஷயம் இது.. பட் கொஞ்சம் ஓல்டா கட்டுப்பெட்டியா தான் இருக்கு.. இருந்தாலும் You girls are awesome.. இந்த மாதிரி இருக்குற எல்லா கேர்ள்ஸையும் சொல்றேன்.."
ரேகா சிரித்து விட்டு கேட்டாள்.
"உங்களுக்கு இந்த ஆன்ஸர் கேட்க கொஞ்சம் கடுப்பா கோவமா வரல.."
"ஹானஸ்ட்டா சொல்லனும்னா.. எஸ் கொஞ்சம் கடுப்பா தான் இருக்கு.. பட் இதே வார்த்தைய என் அக்காவோ என் தங்கச்சியோ சொல்லும் போது சந்தோஷப்படுவேன் அப்டிங்குறப்போ நீங்க சொல்றப்ப மட்டும் 'இல்ல.. இந்த மாதிரி நீங்க சொல்றது தப்பு.. லவ் மேரேஜ் தான் நீங்க பண்ணிக்கணும்.. அது தான் பெஸ்ட்டு' நான் சொன்னா அது அயோக்கியத்தனம். So I respect your decision.."
ரேகா புன்னைகைத்தாள்.
"தேங்க் யூ வினோத்.."
வினோத்தும் பதிலுக்கு சிரித்தான். அவள் கோபம் மறந்து சகஜமாக பேசியதை விரும்பிய வினோத் மேற்கொண்டு பேச்சினை தொடர்ந்திட நினைத்தான். எதைப் பற்றி பேசுவது எனத் தெரியாமல் ஒரு கேள்வியைக் கேட்டான்.
"சரி வீகெண்ட்ஸ் என்ன பண்ணுவீங்க..?"
மொக்க கேள்வி தான். ஆனால் பேச்சினை தொடர்வதற்கு இது போதுமென நினைத்தான். அதோடு அவளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அந்த கேள்வி உதவும் என நினைத்தான்.
"பெருசா ஒண்ணும் பண்ணமாட்டேன்.. சாட்டர்டே மேக்சிமம் ரெஸ்ட்.. இல்லனா மூவி, பிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங்ன்னு போவேன்.. சண்டே சர்ச்க்கு போவேன்..?"
அதிர்ச்சியானான் வினோத்.
"சர்ச்சா..? நீங்க ஏன் சர்ச்க்கு போறீங்க..?"
"நீங்க ஏன் போறீங்கன்னா..? Because I am a christian.."
சில நொடிகள் அங்கே பேச்சில்லை.
"கிறிஸ்டியனா..? உங்க பேரப் பாத்தா கிறிஸ்டியன் மாதிரியே தெரியலையெங்க.."
"ஹலோ.. கிறிஸ்டியன்னா எல்லாருமே மேரி, ஜெனிஃபர்ன்னு தான் பேரு வைக்கணுமா.. ரேகான்னு வைக்க கூடாதா..?"
"அய்யோ.. நான் அப்டி மீன் பண்ணலங்க.. பேரு நார்மல் ஹிந்து பேரு மாதிரி இருந்தது.. அதான் கேட்டேன்.."
"ஹ்ம்ம்.. அப்பாக்கு இந்த பேரு ரொம்ப பிடிச்சிருந்ததுன்னு வச்சாங்க.."
"ஓ ஓக்கே ஓக்கே.."
ஒருவாறு சிரித்து சமாளித்தான் வினோத். பாக்கெட்டில் உறுத்திக் கொண்டிருந்த சின்ன டைரி நோட் அவன் செய்ய வேண்டிய மற்றொரு காரியத்தை நினைவுப்படுத்தியது.
"ரேகா.. நீங்க எனக்கொரு ஹெல்ப் பண்ணனும்.."
"ஹ்ம்ம்.. என்ன சொல்லுங்க.."
பாக்கெட்டில் இருந்து அந்த கவிதை நோட்டினை எடுத்தான்.
"இத நீங்க வாங்கிக்கணும்.."
"என்ன இது..?"
"உங்கள பாத்த மொத நாள்ல இருந்து நான் எழுதின கவிதைங்க.."
"தமிழா.."
"ஹ்ம்ம் ஆமா.."
"அய்யோ.. எனக்கு தமிழ் படிக்கத் தெரியாதே.."
"என்னங்க.. ஒரு தமிழ் பொண்ணுக்கு தமிழ் படிக்கத் தெரியாதா..?"
"ஹலோ.. நான் தமிழ் பொண்ணுன்னு உங்ககிட்ட சொன்னேனா.. நான் மலையாளி.. மலையாளம் தான் என் மதர்டங்.."
அவள் கொடுத்த அடுத்த அதிர்ச்சியில் கையில் வைத்திருந்த கவிதை நோட்டினைப் பிசைந்தபடி உறைந்துப் போய் உட்கார்ந்திருந்தான் வினோத்.

(தொடரும்..)

கருத்துகள்