“பர பரன்னு ஒரு படம் பாக்குற மாதிரியான த்ரில்லர் நாவல்” – ரொம்ப நாள் ஆச்சி இப்படி சொல்லிக்குற மாதிரி ஒரு நாவல் படிச்சி. எத்தனை இலக்கியத் தரம் நிறைந்த புத்தகம் படிச்சாலும் இந்த மாதிரி ஒரு புத்தகம் படிச்சிட்டா புத்தக வாசிப்பு மேல இருக்குற காதல் இன்னும் அதிகமாயிடுது.
உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதற்காக அங்கே மற்ற நாட்டு அணிகள் இந்தியா வருகின்றன. முதல் அணியாக இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மீது கொலை முயற்சி நடத்தப்படுகிறது. பிறகு அடுத்தடுத்த நாட்களில் மற்ற நாட்டு வீரர்கள் கொல்லபடுகிறார்கள். தொடர்ந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்துமா என்ற பரபரப்பு ஒரு பக்கம். உலகக் கோப்பை கிரிக்கெட்டை நேரில் பார்க்க பத்திரிக்கை போட்டியில் வெற்றி பெற்று அப்பாவுடன் மும்பை வரும் காஞ்சிபுரம் பெண் கௌதமி கடத்தபடுவது ஒரு பக்கம். பிபிசி-யில் வேலை செய்து கொண்டிருந்த ரிச்சர்ட் சிஐஏ-வால் பணியில் அமர்த்தப்பட்டு, இந்தியாவின் அணு ஆயுத சோதனை குறித்து உளவறிய வந்து இந்த உலக கோப்பை களேபரத்தில் மாட்டிக் கொள்வது ஒரு பக்கம். இப்படி வெவ்வேறு இடங்களில் தொடங்கும் நாவல் (வழக்கமான வார்த்தையைத் தான் இங்கே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. மன்னிக்கவும்) ரெக்கை கட்டிக் கொண்டு பறக்கிறது. மொத்த நாவலையும் இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்தேன். அத்தனை விறுவிறுப்பு.
13 வருடங்களுக்கு முன்பு ராஜேஷ் குமார் நாவல்கள் படித்தப் போது அடுத்து என்ன அடுத்து என்ன என்று பக்கங்களை திருப்பிக் கொண்டே இருப்பேன். எத்தனை நேரம் படிக்கிறேன் என்பதை எல்லாம் மறந்து. பிறகு சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், சுஜாதா, வைரமுத்து, கல்கி, எஸ்.ராமகிருஷ்ணன் என வேறு வேறு எழுத்தாளர்களிடம் சென்று, 90 சதவிகித வாசகர்களை போல ஆரம்ப கட்டத்தில் வாசிப்பினைத் தூண்டிய இந்த த்ரில்லர் வகை நாவல்களை மறந்து போய் விட்டேன். இன்று இந்த நாவல் வாசித்த போது அந்த பழைய வாசகனை என்னுள் மீண்டும் உணர்ந்தேன். நாவலின் எழுத்தாளர் தரணி. இப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்பது இந்த நாவலை பார்க்கும் வரை தெரியாது. நூலகத்தில் இந்த புத்தகத்தை வாசிக்க எடுத்ததன் காரணம் புத்தகத்தின் அட்டைப்படமும், இது கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடும் என்பது தான். கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடுகள் மீது எனக்கு எப்போதுமே பெரும் நம்பிக்கை உண்டு. அதன்படியே இந்த முறையும் அந்த நம்பிக்கை காப்பாற்றப்பட்டுவிட்டது.
“விறுவிறுப்பான தமிழ் த்ரில்லர் நாவல் வேண்டும்” என்பவர்கள் தயவு செய்து வாசியுங்கள்.

கருத்துகள்