ஒ காதல் கண்மணி

சுஹாசினி மேடம் பேசுன பேச்சுக்காகவே இந்த படத்தோட விமர்சனம் பலரால் எழுதப்பட்டுவிட்டது.. என் விமர்சனத்துக்காகவும் வாசகர்கள் யாரும் காத்திருக்கவில்லை என்பதால் கொடுத்த நூறு ரூபாய்க்கு எந்த அளவுக்கு வொர்த் ஆக இருந்தது, படம் பார்க்கும் போது எனக்கு நெருடிய விஷயங்கள் இவைகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.. 



துல்கர், நித்யாமேனன் இருவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.. இளமை "பொங்கி வழிந்தது" அவர்கள் இருவரின் நடிப்பிலும்.. நித்யாமேனன் பல காட்சிகளில் சும்மா பளபளவென இருந்தார்.. அதே போல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தன.. பிரகாஷ் ராஜை விட லீலா சாம்சன் நடிப்பு வெகு இயல்பாக இருந்தது.. அவரின் வசன உச்சரிப்பிலும் எவ்வித நடிப்பும் தெரியவில்லை.. 

லிவிங் டுகெதர் என்றால் இவளோ தானா..?? எனக்கு "Friends with benefits" படம் தான் நியாபகம் வந்தது.. அதில் லிவிங் டுகெதர் இல்லை.. அறையை மட்டும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.. காதல் என்று  ஹீரோவும், ஹீரோயினும் சொல்லிகொள்வதில்லை.. ஆனால் காமம் மட்டும் அவர்களுக்கிடையே உண்டு.. இந்த படத்தில் காதலிக்குறேன் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.. கண்மணி கண்மணி என்று கொஞ்சிக் கொள்கிறார்கள்.. காமம் கொள்கிறார்கள்.. என்னமோ ஒரு மாதிரி குழப்பமாகவே இருந்தது.. "லிவிங் டுகெதர்னா  இதான் பண்ணுவாய்ங்களோ" என்று தோன்ற ஆரம்பித்தது.. 

ஹீரோ தடாலென ஒரு கருவை சொல்லி மேல் அதிகாரியிடம் வீடியோ கேம் ப்ராஜெக்ட் பெறுவது எல்லாம் இது போன்ற பாண்டஸி காட்சிகளில் தான் நடக்கும்.. வசனங்கள் நிறைய இடங்களில் நன்றாக இருந்தன.. ஆனால் அந்த வசனங்கள் எல்லாம் ஏதோ செயற்கையாக இருப்பதாகப்பட்டது.. இந்த படத்தில் மட்டுமல்ல "அலைபாயுதே"விலும் இதே போல் தோன்றியிருக்கிறது... 

கிளைமாக்ஸ் நெருங்கும் போது இருவரும் சண்டை போட்டு கொள்ளும் காட்சி ரொம்ப செயற்கையாக இருந்தது.. வெட்டியா சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.. என் மூளைக்கு அந்த சண்டையின் பின்னணி அவ்வளவாக புரியவில்லை... 

நிறைய காட்சிகள் மங்கலாக இருப்பதை போல் இருந்தன.. அது தியேட்டர் பிரச்சனையா இல்லை P.C.ஸ்ரீராம் காட்சிகளை எடுத்ததே அப்படித்தானா  என்று தெரியவில்லை.. ஆனால் நிறைய புதிய கோணங்களில் காட்சிகளை காட்டியிருந்தார்.. இசை சொல்ல வேண்டியது இல்லை.. "மன மன மெண்டல் மனதில்", தீம் மியூசிக் சூப்பர்..

இது போன்ற நெருடல்கள், சில கடுப்பேத்தும் காட்சிகளையும் தாண்டி படம்  எனக்கு பிடித்தே இருந்தது.. 

இடைவேளையின் போது எனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர் எழுந்து என்னை கடந்து போகும் போது "என்னா படம் நல்லா இருக்கு.. தண்டமா இதுக்கு வந்துட்டோம்" என்று பேசிக் கொண்டு போனார்கள்.. காஞ்சனா-2வும் இதுவும் காட்சிகள் மாறி மாறி ஓடுவதால் காஞ்சனா போகலாம் என்று நினைத்து வேறு வழி இல்லாமல் "சரி இதை பார்ப்போம்"  என உள்ளே வந்துவிட்டார்கள்  போல.. இடைவேளைக்குப் போனவர்கள் திரும்பி வரவே இல்லை.. சுஹாசினி மேடம்  "தகுதியான விமர்சகர்கள் மட்டுமே விமர்சனம் பண்ண வேண்டும்" என்று சொல்லும் போதே "தகுதியான பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க வர வேண்டும்" எனக் கூறியிருக்கலாம்..

கருத்துகள்