வண்ணங்களை தொலைத்த வானவில்

*  பேருந்து நிறுத்தத்தில்...
   வெள்ளைத் தோலின் மினுமினுப்பில்
    கண்கள் தொலைக்கும் காளையரே...!
    கறுப்புத் தோல் கொண்ட
    இந்த கன்னிகளின் உணர்வுகள் புரியவில்லையா..?

*  நிறம் மட்டுமே நிஜம் என்ற
    உங்கள் நிழல் உலகத்தில்
    அந்த வெள்ளை தேவதைகளுக்கு
    வேலைக்காரிகளா நாங்கள்..?

*  சப்பை என்று எங்களை சாடும் பொழுது
    உடன் பிறந்த உங்கள் சகோதரிகளின்
    நினைவுகள் வரவில்லையா...?

*  திராவகம் அருந்தியதைப் போன்ற
    ஒரு வேதனை உங்களின் கேலிப் பேச்சுக்கள்
    எங்களைக் கீறிப்பார்க்கும் பொழுது...

*   அழுக்குப் படிந்து கிடக்கின்றன..
     முகத்தைக் கண்டு ஆர்ப்பரிக்கும்
     உங்களின் அகத்தில்.....
     அப்புறப்படுத்துங்கள் அதை...

*  நாங்கள் வண்ணங்களை தொலைத்த வானவில்...
    வசைப்பாடி வதைக்காதீர்கள் எங்கள் வாழ்வினை...

* தரம் குறைந்த உங்களின் கிண்டல்களால்
   தாழ்வு மனப்பான்மை எனும் நச்சு மரம்
   முளைக்கிறது எங்கள் மனதில்..
   வெந்து வெதும்புகிறோம் நாங்கள்...
   அதை வெட்டி எறிவதற்குள்...

*  ஆராதிக்க சொல்லவில்லை எங்கள் அழகை...
    அதை அசிங்கப்படுத்தி ஆனந்தம் காண முயலாதீர்கள்
    என்பதே எங்களின் உறுதியான இறுதி வேண்டுகோள்...!!

கருத்துகள்