உறங்காமல் விழித்துக் கிடக்கும் தன் பிள்ளைக்கு ஒரு தாய்
பாடும் தாலாட்டு
என் கருவறை
நிறைத்து வந்த கண்மணியே...
மெத்தையிலே
விழி இன்னும் நீ மூடலையே...
தாலாட்டு பாடி
உன்னைத் தூங்க வைக்க
தாய் உன்னை
மடி மீது ஏந்தி நின்றேன்...
நீ விழி
மூடும் வரை நான் விழித்திருப்பேன்...
உன்
கனவுகளையும் உனக்காக துவைத்து வைப்பேன்...
கண்ணுறங்கு
என் செல்லமே...
கவலை சுமக்க
நானிருக்கேன்...
என்
உதிரமனைத்தையும் உனக்கூட்டி
உன்னை நான்
வளர்த்தெடுப்பேன்...
.jpg)
கருத்துகள்