கதை
ஆதிக்காடு என்ற மலையோர கிராமத்துக்குள் புகுந்து அடிக்கடி உயிர்சேதம் செய்யும் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்டாமல் அங்கு வாழும் மக்களை விரட்டப் பார்க்கிறது அரசாங்கம். அதனால் அரசாங்கத்தின் உதவியை உதறிவிட்டு தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள காட்டு யானைகளை விரட்டுவதற்கு பயிற்சிப் பெற்ற கும்கி யானை ஒன்றினை ஏற்ப்பாடு செய்ய முடிவெடுக்கிறார்கள் ஊர்மக்கள். கும்கி யானையை கொண்டுவர வேண்டிய நபர் தன் குடும்ப பிரச்சனையால் வர முடியாமல் போக அவர் வரும் வரை ஊர் மக்களை சமாளிக்க கும்கி யானை என்று பொய் சொல்லி கோவில் யானை மாணிக்கத்துடன் ஊருக்குள் நுழைகிறார்கள் விக்ரம் பிரபு, தம்பி ராமையா மற்றும் ஒரு உதவியாளர். வந்த இடத்தில ஊர் தலைவரின் மகள் லக்ஷ்மி மேனனை கண்டதும் காதலில் விழும் விக்ரம் பிரபு அங்கேயே தங்க முடிவெடுத்து கோவில் யானையை கும்கி யானையை மாற்ற முயற்சிக்கிறார். அவரின் முயற்சி பலித்ததா..? கோவில் யானை மாணிக்கம் கொம்பன் என்ற காட்டு யானையை கொன்று ஊர் மக்களை காப்பாற்றியதா...? விக்ரம் பிரபுவின் காதல் கை கூடியதா...? என்ற கேள்விகளுக்கு விடையே கும்கி....
நடிப்பு
நடிகர் திலகம் வீட்டில் இருந்து கிளம்பி இருக்கும் விக்ரம் பிரபு முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு தன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிருக்கிறார். ஆனால் நடிப்பதற்கு பெரிதும் வாய்ப்பில்லாத காட்சி அமைப்புகள் தான் அவருக்கு. பாகனாக அவர் தன் யானை மீது காட்டும் பாசமும் தந்தங்களை பிடித்து கொண்டு தண்டால் எடுப்பதும் அவரை பாகனகவே நம் கண் முன் நிறுத்துகிறது. ஊர் தலைவர் மகள் அல்லியாக சுந்தரபாண்டியனில் மிகை இல்லாத தன் நடிப்பாலும் அழகாலும் நம் மனம் கவர்ந்த லக்ஷ்மி மேனன். வித்தியாசமான சிகை அலங்காரமும் ஆடை உடுத்தாலும் அவரின் முந்தைய படத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இவருக்கும் நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை என்றாலும் கிடைத்த காட்சிகளை நன்றாக பயன்படுத்திருக்கிறார். பிரபு சாலமன் கதையை விட பெரிதும் நம்பி இருப்பது தம்பி ராமையாவை தான் போலும் என என்னும் அளவிற்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். நிறைய காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் பேசிய வசனங்களையே மீண்டும் மீண்டும் பேசி வெறி ஏற்றுகிறார். பெரும்பாலும் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் மைண்ட் வாய்ஸ் இல் தான் ஓடுகிறது. நாயகனை விட இவர் பேசும் வசனங்கள் தான் அதிகம். ஊர் தலைவராக வருபவரின் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. மாணிக்கத்தின் ( யானை) நடிப்பும் கச்சிதம்.
பிடித்தவை
1. மாணிக்கம் என்ற யானையை பயன்படுத்தி சில காட்சிகளை நன்றாக அமைத்திருப்பது. உதாரணமாக தண்ணிக்குள் விழ போகும் லக்ஷ்மி மேனனை யானை தாங்கி பிடிக்கும் காட்சி. பலரது கைதட்டல்களை பெற்றது.
2. இமானின் பாடல்களும் பின்னணி இசையும். மைனாவை விட இதன் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
3. சுகுமாரின் ஒளிப்பதிவு. படத்தின் நாயகன் இவர் தான் என்று அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். குறிப்பாக சொல்லிட்டாளே பாடலில் அருவியை படமாக்கிருக்கும் காட்சி. பலத்த பாராட்டுக்கள்.
4. தம்பி ராமையாவின் நகைச்சுவை. டைமிங் வசனங்களால் நம்மை பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். மைனாவை விட இதில் அவரின் பங்கு அதிகம்.
பிடிக்காதவை
1. விக்ரம் பிரபு காதலித்துக் கொண்டே இருப்பது. "சீக்கிரம் போய் லவ் பண்றேன்னு சொல்லுங்க பாஸ்" என்று நாம் பொலம்பும் அளவிற்கு காதலித்துக் கொண்டே இருக்கிறார்.
2. கொம்பன் என்ற காட்டு யானைக்கு பில்டப் கொடுத்து கொண்டே இருப்பது.
3. என்ன தான் ரசிக்கும் படி இருந்தாலும் தம்பி ராமையா பேசிக்கொண்டே இருப்பது நம்மை பொறுமை இழக்க செய்கிறது சில இடங்களில். அதுவும் எல்லா வசனங்களும் மைண்ட் வாய்ஸ்இல் ஓடுவது நம்மை சலிப்படைய செய்கிறது.
4. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாமல் போவது.
5. எப்ப வரும் எப்ப வரும் என்று நாம் எதிர்ப்பார்த்து கிடக்கும் கொம்பன் என்ற காட்டு யானைக்கும் மாணிக்கம் என்ற கோவில் யானைக்கும் நடக்கும் சண்டை காட்சி இறுதியில் சப்பென்று முடிவது.
ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்
பாடல் காட்சிகளிலும் நகைச்சுவை காட்சிகளிலும் கைதட்டல்கள் நிறையவே கேட்டன. இரு யானைகளுக்கு இடையிலான சண்டை காட்சியை ஏதோ பெரிய ஹீரோ சண்டை செய்வதை போல ஆரவாரத்துடன் ரசித்தார்கள்.
கடைசியா ஒரு வார்த்தை
மைனா அளவிற்கு நம் மனதை பாதிக்கவில்லை என்றாலும் கொடுத்து காசுக்கு நம்மை திருப்திபடுத்திருக்கிறது இந்த கும்கி.

கருத்துகள்