தீபாவளி ரிலீஸ்

தீபாவளி என்றால் பட்டாசு, புது ஆடை, வகை வகையான இனிப்புகள் என்பதை போல தவிர்க்க முடியாத இன்னொன்று அன்று ரிலீசாகும் புது படங்கள். சிலருக்கு அன்று எதாவது ஒரு புது படத்தை பார்த்தால் மட்டுமே தீபாவளி கொண்டாடியது போல இருக்கும். அந்த அளவிற்கு திரைப்படங்கள் நம் பண்டிகை நாட்களை தன் வசம் வைத்திருக்கிறது. முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் 5 அல்லது 6 திரைப்படங்கள் வரும். அந்த காலம் எல்லாம் போய் இன்று 2 படங்கள் வந்தாலே பெரிது என்றாகிவிட்டது. காரணம் தியேட்டர் பற்றர்க்குறை. ஒரு படத்தையே பல தியேட்டர்களில் ரிலீஸ் செய்து முதல் ஒரு வாரத்திற்குள் கல்லா கட்ட நினைக்கிறார்கள் தியேட்டர் அதிபர்களும் திரைப்பட தயாரிப்பாளர்களும். விளைவு படம் ரிலீசான பத்தே நாட்களில் பாதி தியேட்டர்களில் இருந்து ஓடி விடும்.இந்த புதிய டிரண்டில் இந்த வருட தீபாவளிக்கு ரிலீசாகும் திரைப்படங்கள்: துப்பாக்கி, போடா போடி, அம்மாவின் கைபேசி.. இழுப்பறியில் இருந்த தீபாவளி லிஸ்ட் படங்களில் சில படங்கள் கழண்டு கொள்ள இறுதியாக இந்த மூன்று படங்களும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று படங்கள் பற்றிய சிறு முன்னோட்டம்..

துப்பாக்கி:
விஜய் - முருகதாஸ் - சந்தோஷ் சிவன் - தாணு என்று பெரும் புள்ளிகள் ஒன்று சேர்ந்துள்ளதால் படத்திற்கு  எதிர்ப்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. ராணுவ வீரன் சம்மந்த பட்ட கதை என்பதால் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. 


விஜய் ரசிகர்களை துப்பாக்கி முழுத்திருப்தி படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.முருகதாஸ் படங்களில் ஏழாம்  அறிவு மட்டுமே கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அது தவிர்த்து மற்ற அனைத்தும் வெற்றி படங்களே என்பதால் முருகதாஸ் ஏழாம் அறிவில் விட்ட இடத்தை துப்பாக்கி படத்தின் மூலம் பிடிப்பார் என்று நம்பலாம். 

போடா போடி:
நீண்ட நாட்களாய் தயாரிப்பில் இருந்த படம். சிம்புவை மட்டுமே தன் அடையாளாமாய் கொண்டு வரும் படம். முழுக்க முழுக்க பிரெஷ் டீம். சரத்குமார் மகள் வரலக்ஷ்மி தான் படத்தின் நாயகி. சிம்புவின் நண்பரே இயக்குனர். பாடல்கள் ஹிட்டாகி உள்ளதால் படம் பற்றிய எதிர்ப்பார்ப்பு ஏறி உள்ளது. 



துப்பாக்கி தவிர்த்து வேறு பெரிய படங்கள் போட்டிக்கு இல்லாததால் படத்திருக்குன்டான வெற்றி வாய்ப்பு கணிசமாக உள்ளது. விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்புவிற்கு வேறு வெற்றி படங்களே அமையவில்லை. போடா போடி சிம்புவிற்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்மாவின் கைபேசி: 
பள்ளிகூடத்திற்கு பிறகு தங்கர் பச்சன் இயக்கிய களவாடிய பொழுதுகள் இன்னும் ரிலீசாகத நிலையில் தன் அடுத்த படத்தை இயக்கி வெளீட்டிர்க்கு தயாராக வைத்துள்ள படம் தான் அம்மாவின் கைபேசி. 



அழகி படத்திற்கு பிறகு தங்கர் பச்சன் இயக்கிய அனைத்து படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்றதே தவிர வியாபார ரீதியாக அழகி தவிர எந்த படமும் ஓடவில்லை. இருப்பினும் நல்ல கதைகளை மட்டுமே படம் எடுப்பேன் என்ற தங்கர் பச்சனின் கொள்கைக்கு கொஞ்சமும் பங்கம் ஏற்படுத்தாத படமாகத்தான் அம்மாவின் கைபேசி வந்துள்ளதாம். நல்ல விமர்சனங்களை தாண்டி வியாபார ரீதியாக படம் வெற்றி பெறுமா என்பதை தீபாவளி வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள்