தமிழ் தாயே...!!

* தலைமுறை பல தாண்டியும் தன்னிலை மாறாத 
  எம் தமிழன்னையே...!
* காலமெனும் ஓடையில் கரைந்து போன 
  பல பழமைகளுக்கு இடையிலும் 
  உன் பளபளப்பு இன்னும் குறையவில்லையே...!!
* கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்கு 
  முன் தோன்றிய உன்னில் கருத்தரிக்க 
  நாங்கள் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்...!!
* உன்னை உச்சரிக்கும் பொழுது நாவில் எழும் 
  தித்திப்பை மிஞ்சும் இனிப்புப்பண்டமும் 
  உண்டோ வேறெங்கும்..!!
* உன்னோடு காதலாகிதான் எம் முன்னோர்கள் 
  அளித்துச் சென்றார்கள்   சில 
  நல்லொழுக்க இலக்கியங்களை...!!
* தன்னை நாடும் வறியவர்க்கு 
  வாழ்வளிக்கும் வள்ளல் நீ..!
  ஆனால் சகட்டு மேனிக்கு சிலர்
  பிதற்றுகிறார்கள் இங்கே..!!
* அழிந்து வருகிறாயாம் நீ...!!
  கரைந்து போகிறதாம் உன் சிறப்பு...!!
  எத்தனை மூடத் தனம் வேண்டும்
  இதனை உரைப்பதற்கு...!!
* இன்றும் உன்னில் கவிதை பேசினால் 
  கைதட்டல்கள் வானைப் பிளக்கும்...!!
  கூட்டம் மயிர்கூச்செறியும்...!!
* அயல் மொழி வந்துவிட்டால் 
  எங்கள் உயிர்மொழி நீ 
  இறந்து விடுவாயா என்ன..?
* காலத்தால் நீ நிச்சயம் மாறப்போவதில்லை..
  ஆனால் காலத்தை மாற்றிக்காட்டியவள் நீ..!!
  உன் கம்பீரத்தின் நிழலில் தான் நாங்கள் எல்லோரும்...!!
* எங்கும் நீயே...!! எங்கள் தமிழ் தாயே...!!

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மெய் சிலிர்க்கும் கவிதைக்கு நன்றி...
அடுத்தவர்கள் பேசும் தமிழுக்கு கை தட்டுவது மட்டும் போதாது.. ஒவ்வோருவரும் தமிழில் பேசுவதை பெருமையாக எண்ணினால் இன்னும் நலமாக இருக்கும்..