சிரித்த முகத்துடன் கேபினுக்குள் நுழைந்த வினோத்தை விநோதமாகப் பார்த்தான் மதன்.
"என்னடா சிரிச்சிகிட்டே வர..?"
பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே இருந்தான் வினோத்.
"டேய்.. சொல்லிட்டு சிரிடா.. என்னாச்சி..?"
"மச்சான்.. அவ கிட்ட மறுபடியும் போய் பேசுனேன்.."
"நிஜமாவா..?"
"ஆமா டா.. இங்க பாரு அவகிட்ட பேசும் போது நடுங்க ஆரம்பிச்ச கை இன்னும் நடுங்கிட்டு இருக்கு பாரு.."
"பாத்து.. நரம்பு தளர்ச்சியா இருக்க போகுது.. நல்ல டாக்டர போய் பாரு.."
"அடச்சீ.. போடா.."
"சரி மொத தடவ பேசும் போதே நிக்காம ஓடிட்டான்னு சொன்னியே மறுபடியும் எப்டி உங்கிட்ட பேசுனா"
"கேன்டீன்ல தனியா உக்காந்துட்டு இருந்தா போய் பேசிட்டேன்.."
"ஹ்ம்ம்.. என்ன பேசுன.."
வினோத் ஒரு வார்த்தையையும் விடாமல் அப்படியே ஒப்புவித்தான்.
"ஏண்டா பக்கி மாதிரி அந்த பொண்ணு காசுல இந்த கோக் வாங்கிட்டு வந்திருக்க.. அவ என்ன நினைப்பா உன்ன பத்தி.."
"மச்சி.. நான் ஏதாவது வாங்கி கொடுத்திருந்தா கண்டிப்பா வேணாம்னு தான் சொல்லியிருப்பா.. இப்போ நெக்ஸ்ட் டைம் பாக்கும் போது நான் வாங்கிக் கொடுத்தா வேணாம்னு சொல்ல மாட்டால..?"
"எத்தனை நாளா போட்ட பிளான் டா இது.."
"பிளான்லாம் இல்ல மச்சி.. அவள இனிமே பாக்க கூடாது, பேச ட்ரை பண்ண கூடாது, நினைக்க கூடாதுன்னு தாண்டா இருந்தேன்.. ஆனா மறுபடியும் அவள கேன்டீன்ல பாத்ததும் இப்போ சொன்ன எல்லாமே மறந்து போச்சி.. அதான் டக்குனு போய் பேசிட்டேன்.. ஒரு பக்கம் பயமாவும் இருந்தது.. எங்க ஹச்.ஆர். டீமுக்கு கம்பளைண்ட் ஏதும் ரெய்ஸ் பண்ணிடுவாளோன்னு.."
"ஹ்ம்ம்.. எப்படியோ.. பிரென்ட் ஆகிட்ட.. சீக்கிரம் லவ் பண்ண வச்சிடுவ.. அதானே.."
"தெரியலடா.. லவ் பண்ணா சந்தோஷம்.. இல்லனா அவ பிரெண்ட்ஷிப் கிடைச்சதே போதும்ன்னு நினைச்சிப்பேன்.."
"எப்படி.. லாலாலான்னு ஆர்.ஆர். போட்டுக்கிட்டே கிளம்பிடுவியாக்கும்.. பாக்கலாம்.."
வினோத் சிரித்துக் கொண்டான் எதிர்காலம் அவனுக்கும் ரேகாவிற்கும் என்ன மாதிரியான முடிவை வைத்திருக்கிறது என்பது தெரியாமல்.
மகேஷிடம் சொல்லும் போது அவனும் நம்பவே இல்லை.
"டேய்.. இப்டியெவாடா பேசுன..?"
"ஆமா.. ஏன்..?"
"உங்கூட பேசுனா ஒரு வேளை உன்ன புடிக்காம போகலாம்னு சொன்னா எப்பிடிடா அந்த பொண்ணு பேசுவா..?"
"மச்சி.. அவளுக்கு வேண்டியது லவ் பன்றேன்னு நான் பின்னாடி சுத்தக்கூடாது.. அவ்ளோதான்.. எனக்கு அவளை புடிக்காம போகணும்னு தான் அவளும் நினைப்பா.. அதான் அப்படி சொன்னேன்.."
"அப்போ அவ கிட்ட பேசுனா உனக்கு அந்த பொண்ணப் புடிக்காம போய்டும்.. அதான் சொல்ல வரியா..?"
"தெரியலடா.. தூரத்துல இருந்தே பாத்துட்டு இருந்தவள பக்கத்துல நின்னு பேசுறதுக்கும் பழகுறதுக்கும் ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.. மே பி நான் சொன்ன மாதிரி அவள புடிக்காம போய்டலாம்.. இல்ல அவ மேல இன்னும் அதிகமா லவ் வரலாம்.. இல்ல அவளுக்கு என் மேல லவ் வரலாம்.. இல்ல கடைசி வரைக்கும் "ஒரு ஸ்ட்ரெஞ்சர்" மாதிரியே அவ என் ட்ரீட் பண்ணிட்டு போய்டலாம்.. என்ன வேணா நடக்கலாம்.. I take my chances.. பாக்கலாம்.."
"மறுபடியும் நீ ப்ரொபோஸ் பண்ண மாட்டியா..?"
"அப்டித்தான் பிராமிஸ் பண்ணியிருக்கேன்.."
"அந்த பொண்ணு பக்கத்துல இருந்துட்டே மறுபடியும் ப்ரொபோஸ் பண்ணாம உன்னால இருக்க முடியும்ன்னு எனக்கு தோணல.."
"எனக்கும் தோணல.. ஆனா அவகிட்ட பேசுறதுக்கு கிடைச்ச இந்த சான்ஸ் போதும் இப்போதைக்கு.."
"ஹ்ம்ம்... காதல் ரொம்ப பொங்குதோ..?"
"நெறையவே.. அவள பாத்துகிட்டே இருக்கணும் போல தோணுது.. அவ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் நியாபகத்துல இருக்கு.. அவ இருக்குற இடம்.." என வினோத் தொடர்ந்து கொண்டே இருக்கும் போது வெறுப்பான மகேஷ்,
"யப்பா டேய்.. தெரியாம கேட்டுட்டேன்டா.. விட்டுடா.. ஏண்டா.. லவ் பண்றவன் எல்லாமே பைத்தியம் மாதிரி பேச ஆரம்பிச்சிடுறிங்க.." என்றான்.
"அது கண்டிப்பா தெரியனுமா..?"
"ஆமா.."
"அப்போ நீயும் லவ் பண்ணி பாரு.."
"ஏண்டா.. நான் நல்லா இருக்குறது புடிக்கலையா.. ஆள விட்றா சாமி.."
மகேஷ் டிவி பார்க்கத் தொடங்க பேஸ்புக்கில் இருந்த ரேகாவின் புகைப்படத்தை தன் மொபைலில் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வினோத்.
ரேகாவை பார்ப்பதற்காக பெரும்பாலான நேரத்தை கேன்டீனில் செலவளிக்கத் தொடங்கினான் வினோத். அவள் எப்போது பிரேக் வருகிறாள் என்பதே புதிராக இருந்தது. ஒரு வேளை தன்னை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக வேறு வேறு நேரத்தில் பிரேக் வருகிறாளோ என சந்தேகித்தான் வினோத். வாரத்தில் ஒரு முறை அவளை கேன்டீனில் சந்திப்பதே மிகப் பெரும் சவாலாக இருந்தது. வாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று பார்த்தே தீருவது என்ற முடிவோடு அவளுக்காக கேன்டீனே பழியாய் கிடந்தான் வினோத். அவனது காத்திருப்புக்கு அன்று பலன் கிடைத்தது. நீல நிறசுடிதார் அணிந்து கேன்டீன் உள்ளே நுழைந்தாள் ரேகா. காபி கோப்பையுடன் அவள் டேபிள் ஒன்றை தேடி அமர்ந்த பிறகு வினோத்தும் எழுந்து அவளுடன் சேர்ந்து கொண்டான்.
"ஹாய்.." எனக் கூறியது மட்டுமே அவனுக்கு நினைவிலிருந்தது. அவள் பதிலுக்கு "ஹாய்" சொல்லும் போது வினோத் வேறொரு உலகத்தில் இருந்தான்.
"தேவதையே..!
உன்னைக்
காதலிக்க கூடாது
எனும்
எனது உறுதி
உன்னை மீண்டும்
பார்க்கும் வரை
மட்டுமே
தாக்குப் பிடிக்கிறது..!"
கவிதையை மீண்டும் மீண்டும் மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஹலோ.. என்ன சிலை மாதிரி உக்காந்துட்டிங்க..?”
“ஸாரி.. வேற யோசனை.. என்னங்க.. பிரேக் எடுக்குறீங்களா இல்லையா..? கேன்டீன் பக்கம் ஆளையே பாக்க முடியல..”
“என்னை பாக்க இங்க வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா என்ன..?”
“சேச்சே.. அதான் உங்க பின்னாடி சுத்த மாட்டேன்னு சொல்லிட்டேனே.. பாருங்க.. நாம கடைசியா போன வாரம் பேசுனோம்.. அதுக்கு அப்புறம் இப்போ தான் பேசுறோம்.. உங்க பின்னாடி சுத்துறதா இருந்தா டெய்லி வந்து உங்ககிட்ட பேசியிருக்க மாட்டேன்..”
“ஓகே ஓகே.. விடுங்க.. நான் உங்கள நம்புறேன்..”
வழியல் சிரிப்பொன்றை உதிர்த்தான் வினோத். காபியை எடுத்து பருகிக் கொண்டாள் ரேகா. அவளே பேச்சை தொடர்ந்தாள்.
“செம்ம வேலைங்க ப்ராஜெக்ட்ல.. பிரேக் கூட சரியா வர முடியல.. இன்னைக்கு தான் கொஞ்ச நேரம் கிடைச்சிருக்கு.. த்தோ.. இன்னும் 5 மினிட்ஸ்ல உள்ள இருக்கணும்..”
“ஆஹா.. அஞ்சு நிமிஷம் தானா..” என மனதுக்குள் தவித்தான் வினோத்.
“என்னங்க.. பிரேக் கூட வர முடியாத அளவுக்கு அவ்ளோ வேலையா..?”
“ஆமா..”
“பேசாம எங்க டீம் வந்துடுரீங்களா..? டென்ஷன் இல்லாம இருக்கலாம்..”
“டென்ஷன் இல்லாம இருக்கணும்னா வேலை செய்யாமத்தான் இருக்கணும்.. அப்போ நீங்க சும்மா தான் இருக்கீங்களா அங்க..?”
“ஹலோ.. என்னங்க.. உங்க நல்லதுக்கு சொன்னா என்னை கலாய்க்குறிங்க..?”
“ச்சும்மா விளையாட்டுக்கு சொன்னேங்க.. சரி ஓகே.. டைம் ஆச்சி.. நான் கெளம்புறேன்.. Bye..”
“Bye”
அவள் சென்ற பின்பு யோசனையுடன் அங்கே கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தவன் எழுந்து தன் கேபின் நோக்கி நடந்தான்.
வினோத் தன்னுடைய சீட்டில் அமர்ந்த போது தான் அவன் உள்ளே வந்ததையே கவனித்தான் மதன்.
“என்னடா.. வேலை ஞாபகம் வந்துடுச்சா..”
“டேய்.. நீ வேறடா.. சும்மா இருடா..”
“ஹ்ம்ம்.. நான் பேசுறதெல்லாம் சலிப்பா இருக்கும்ல.. இருக்கத்தானே செய்யும்..”
அவனை அலட்சியம் செய்து விட்டு தன்னுடைய கம்ப்யூட்டரை அன்-லாக் செய்தான் வினோத். சில மெயில்கள் வந்திருந்தன. ஒவ்வொன்றாய் படித்துக் கொண்டே வந்தவன் கொஞ்சம் அதிர்ச்சியானான். அவனுடைய மேனேஜர் விஜய்யிடமிருந்து ஒரு மெயில்.
Hi Vinoth,
Meet me in my cabin once you reach.
Regards,
Vijay R
மேனேஜரிடம் நேரிடையாக பேசும் சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் மேனேஜர் பகிர்ந்து கொள்ள நினைக்கும் தகவல்கள் அவனது “டீம் லீடர்” அஜய் மூலமே அவர்களை வந்து சேரும். அப்படியிருக்கையில் ஏன் தனக்கு இப்படி ஒரு மெயில் என குழம்பினான். அவரை சந்திப்பதற்காக இருக்கையை விட்டு எழுந்தான்.
“என்ன மச்சி.. அடுத்த ஷிப்ட்க்கு கெளம்பிட்டியா..” என்றான் மதன்.
அவனை மண்டையில் தட்டிவிட்டு மேனேஜரின் கேபினை நோக்கி நடந்தான் வினோத்.
“Excuse me Sir..”
“Hi Vinoth.. Please come in..”
“ஸார்.. மெயில்..”
“எஸ்.. எஸ்.. உங்கிட்ட பேச தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..”
“என்னாது எங்கிட்ட பேச வெயிட் பண்ணாரா.. ஆஹா அதிர்ச்சி மேல அதிர்ச்சியா இருக்கே..” என மனதுக்குள் நினைத்துக் கொண்டான் வினோத்.
“வினோத்.. என்னாச்சி உனக்கு..” என ஆரம்பித்தார் விஜய்.
புரியாமல் விழித்தான் வினோத்.
“ஸார்..?”
“ஏதாவது பர்சனல் ப்ராப்ளம்..?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லையே ஸார்.. நல்லா தானே இருக்கேன்.. ஏன் ஸார்..?”
“வினோத்.. டூ மந்த்ஸா நீ நிறைய பிரேக் எடுக்குற.. உன் பர்பார்மேன்ஸ் ரொம்ப புவரா இருக்கு.. உன் வொர்க் குவாலிட்டி வெரி வெரி வொர்ஸ்ட் கண்டிஷன்.. இதே வேற யாராவதுனா எஸ்கலேஷன் மெயில் ஆர் ட்ரைனிங் அப்டின்னு பண்ணியிருப்பேன்.. பட் நீ, லாஸ்ட் டூ இயர்ஸ் ‘Employee of the year’ அவார்ட் வாங்குனவன்.. பிளஸ் கிளையன்ட்கிட்ட ஏகப்பட்ட அப்ரிசியேஷன் வாங்கியிருக்க.. ப்ராஜெக்ட்ல எந்த பிரச்சனை வந்தாலும் கிளையன்ட் உன்ன தான் பாக்க சொல்றாங்க.. ஸோ அந்த லெவல்ல இருக்குற நீ இப்படி ஆனதுதான் எனக்கு ஷாக்கிங்கா இருக்கு.. என்னாச்சி..? எனி ப்ராப்ளம்..?”
வினோத்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக நின்றான்.
“ஸார்.. நான் ‘Exxon” ப்ராஜெக்ட்க்கு போய்டுறேன்..”
இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத விஜய் அதிர்ந்தார்.
“வினோத்.. நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்ற.. உனக்கு பர்சனல் ப்ராப்ளம் இருந்தா என்னால முடிஞ்ச ஹெல்ப பண்ணலாம்ன்னு தான் உன்ன வர சொல்லி கேட்டேன்.. அதுக்கு ஏன் ப்ராஜெக்ட் மாறணும்ன்னு சொல்ற..”
“இல்ல ஸார்.. நான் அந்த ப்ராஜெக்ட்க்கு மாறிக்குறேன்..”
“Really I don’t expect this from you Vinoth. Just a minute..” எனக் கூறிவிட்டு இண்டர்காமை எடுத்து வினோத்தின் டீம் லீடர் அஜய்யை அழைத்தார்.
“அஜய்.. ப்ளீஸ் கம் டு மை கேபின்..” எனக் கூறிவிட்டு போனை கீழே வைத்தார். இருவரும் சில நொடிகள் பேசிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தனர்.
“Excuse me Sir..” என்ற அஜயின் குரல் வெளியே கேட்க,
“Please get in Ajay..” என்றார் விஜய்.
உள்ளே வந்த அஜய், கொஞ்சம் கடுமையான முகத்துடன் இருக்கும் விஜய்யையும் தலைக் குனிந்தபடி சற்று தள்ளி நிற்கும் வினோத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.
“ஹ்ம்ம்.. ரைட்டு.. ஏதோ பஞ்சாயத்து..” என மனதுக்குள் நினைத்துக் கொண்டான் அஜய்.
“வா அஜய்..” என அழைத்த விஜய், வினோத்திற்கும் அவருக்கும் நடந்த மொத்த உரையாடலையும் கூறி முடித்தார்.
“நான் ஜஸ்ட் கேரிங்கா கேட்டதுக்கு வேற ப்ராஜெக்ட் போறேன்னு சொல்றான்.. சொல்லு அஜய்.. நான் ஏதாவது தப்பா கேட்டேனா..?” என்ற விஜயின் கேள்விக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தபடி வினோத்தைப் பார்த்தான் அஜய்.
சில நொடிகள் அமைதிக்குப் பிறகு கேட்டான் அஜய்.
“எந்த டீம் போகணும்னு கேட்டான் ஸார்..”
“Exxon ப்ராஜெக்ட்..”
கேட்டதும் மெலிதாக சிரிக்கத் தொடங்கினான் அஜய்.
“என்ன அஜய்.. சிரிக்குற..? என்ன விஷயம்..?”
“ஸார்.. அவன் நீங்க அப்டி கேட்டிங்கன்னு வேற டீம் போறேன்னு சொல்லல..”
அஜய் என்ன சொல்கிறான் என்பது விஜய்க்கு புரியவில்லை.
“என்ன அஜய் சொல்ற.. எனக்கு புரியல..”
“ஸார்.. வினோத் Exxon டீம்ல புதுசா ஜாயின் பண்ண ஒரு பொண்ண லவ் பண்றான்.. ப்ரொபோஸ் பண்ணி அந்த பொண்ணும் நோ சொல்லிட்டு போய்டிச்சி.. அநேகமா அந்த பொண்ணுகாகத் தான் அந்த டீம் போறேன்னு சொல்லியிருப்பான்.. கேட்டுப்பாருங்க..”
அஜய் இப்படி சொன்னதும் விஜய் திரும்பி வினோத்தை பார்த்தார். வினோத் என்ன சொல்வதென்று தெரியாமல் நெளிந்தான்.
“டேய்.. அஜய் சொல்றது உண்மையா..?”
“ஆமா ஸார்” என ஒப்புக் கொண்டான் வினோத்.
பலமாக சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினார் விஜய்.
“அடப்பாவி.. இந்த வேலை வேற பாத்துட்டு இருக்கியா..? அதான் இவளோ பிரேக்.. புவர் பர்பார்மேன்ஸா..? சொல்லவே இல்லையேடா.. யாரந்த பொண்ணு..”
வெட்கப்பட்டான் வினோத்.
“வெட்கம் வேறயா..? இருக்க வேண்டியது தான்.. சொல்லு பொண்ணு பேரு என்ன..?”
“ரேகா..” சின்ன சிரிப்புடன் சொன்னான் வினோத்.
“சூப்பர்.. இத சொல்ல வேண்டியதுதானடா.. சரி.. ஓகே.. அப்போ அந்த பொண்ணு டீம்க்கு நீ போகணும்.. அதானே..”
“ஆமா ஸார்..”
“ரைட்.. நீ நம்ம டீம்க்கு ரொம்ப முக்கியமான அசெட்.. பட் இருந்தாலும் உன்ன அந்த டீம்க்கு மூவ் பண்றேன்.. ஆனா இப்போ வேணாம்.. ஆல்ரெடி நீ 3 இயர்ஸ் இங்க வொர்க் பண்ணிட்ட.. ஸோ அடுத்த லெவல்க்கு போனா தான் கரெக்ட்டா இருக்கும்.. அதனால அந்த ப்ராஜெக்ட்க்கு டீம் லீடர் போஸிஷன் ஏதாவது ஒபெனிங் வந்தா கண்டிப்பா உன்ன மூவ் பண்றேன்.. ஓகே வா..?”
“ஓகே ஸார்..”
“சரி.. அந்த பொண்ண எங்களுக்கு இன்ட்ரோ கொடுக்க மாட்டியா..?”
“நானே இன்னும் இன்ட்ரோ ஸ்டேஜ்ல தான் ஸார் இருக்கேன்.. அந்த பொண்ணு ஓகே சொல்லட்டும் கண்டிப்பா இன்ட்ரோ கொடுக்குறேன்..”
“குட்.. I am happy for you..” எனத் தட்டிக் கொடுத்தார் விஜய்.
“Thank you sir..” எனக் கூறிய வினோத் அஜய்யைப் பார்த்து மெலிதாக சிரித்தான். அந்த சிரிப்பின் மூலம் அஜய்க்கு நன்றியை தெரிவித்தான் வினோத்.
(தொடரும்..)
கருத்துகள்