மாலை 7 மணி. மகேஷ் உள்ளே நுழையும் போது வினோத் உடையைக் கூட மாற்றாமல் எதிரே இருந்த டிவியை வெறித்துப் பார்த்தப்படி உட்கார்ந்திருந்தான்.
“மச்சி.. அந்த பொண்ணுகிட்ட பேசிட்டேன்..”
“ஹ்ம்ம்.. ரிசல்ட் என்ன..?”
“எதிர்பார்த்தது தான்..”
“அப்றம் என்ன.. நீ சொன்ன மாதிரி இனி வேற வேலைய பாரு..”
“ஆனா நான் சொல்ல வந்தத முழுசா கேக்கவே இல்ல டா அவ..”
“முழுசா கேட்டிருந்தாலும் நோ தானே சொல்லியிருக்கும் அந்த பொண்ணு..?”
“ஆமா..”
“அப்புறம் என்ன..” எனக் கேட்டுவிட்டு உடை மாற்றி முகம் கழுவிக் கொண்டு வந்த மகேஷ், ரிமோட்டை வினோத்திடமிருந்து பிடுங்கி சேனலை மாற்றினான்.
“மச்சான்.. அந்த பொண்ணு எங்க ஹச்.ஆரோட ரிலேட்டிவாம்..” என்றான் வினோத்.
“அடடே.. வாழ்த்துக்கள்.. எப்போ என்கொயரி..”
“அதெல்லாம் ஒண்ணும் வரல.. அப்படியே வந்தாலும் நான் சொல்லிடுவேன்.. ‘ஒரு தடவ தான் வந்து பேசுனேன்.. அப்றம் ஏதும் டிஸ்டர்ப் பண்ணலன்னு..’”
“என்னமோ.. எதுக்கும் வெளிய வேற வேலை தேட ஆரம்பிச்சிடு..”எனக் கூறிவிட்டு டிவியில் ஆழ்ந்தான் மகேஷ்.
ஒரு வார காலம் ரேகாவை பார்ப்பதையோ அவள் கண்களில் படுவதையோ முற்றிலும் எச்சரிக்கையுடன் தவிர்த்தான் வினோத். அவள் இல்லாத நாள் தனியாக கேன்டீன் சென்று டீ குடித்துக் கொண்டிருந்த போது அங்கே அவனுடைய ப்ராஜெக்ட்ல் பணிபுரியும் இந்துஜா வந்தாள்.
“என்ன வினோத்.. தனியா உக்காந்துட்டு ஏதோ பயங்கரமான யோசனைல இருக்கீங்க போல..” என்றாள் அவள்.
“யோசனையெல்லாம் ஒண்ணும் இல்ல இந்து.. சும்மா தான் உக்காந்துட்டு இருக்கேன்..”
“ஓகே ஓகே.. இருங்க காபி வாங்கிட்டு வந்துடுறேன்..”
காபி கோப்பையுடன் வந்து வினோத் அருகில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள் இந்துஜா.
“இந்து.. ஒரு பெர்சனல் கேள்வி.. கேக்கலாமா..?”
“ஹ்ம்ம்.. சொல்லுங்க..”
“உங்கிட்ட யாராவது வந்து ப்ரொபோஸ் பண்ணியிருக்காங்களா..?” “ஹ்ம்ம்.. ரெண்டு பசங்க பண்ணியிருக்காங்க..”
“அவங்க ப்ரொபோஸ் பண்ணப்போ நீ என்ன சொன்ன..”
“எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லன்னு சொன்னேன்..”
“ஹார்ஷா சொன்னியா இல்ல சாப்ட்டா சொன்னியா..”
“கொஞ்சம் ஹார்ஷா தான் சொன்னேன்.. இல்லன்னா திரும்ப வந்து டிஸ்டர்ப் பண்ணுவாங்கள்ல அதான்..”
“இனிமே யாராவது உங்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணா அப்படியெல்லாம் ஹார்ஷா பேசாம சாப்டா பக்குவமா ஏன் உனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லன்னு பொறுமையா சொல்லணும்.. ஏன்னா இந்த ஒன் சைடு லவ் பண்ற பசங்க இருக்காங்களே ரொம்ப பாவம்.. லவ் பண்ற பொண்ண மறக்கவும் முடியாம எப்படி மடக்குறதுன்னும் தெரியாம அது ஒரு விதமான அவஸ்தை”
“என்ன திடீர்ன்னு ஒன் சைடு லவ் பாய்ஸ் மேல இவளோ அக்கறை..? ஏதாவது பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ணி பல்பு வாங்கிடீங்களா என்ன..?”
“நான் பிரேக் வந்து ரொம்ப நேரம் ஆச்சி.. கெளம்புறேன்.. bye..” எனக் கூறிவிட்டு இந்துஜா கூப்பிட கூப்பிட நிற்காமல் விறுவிறுவென எழுந்து நடந்தான் வினோத்.
வினோத் ஒரு பெண்ணிடம் காதலை சொல்லி பல்பு வாங்கிய விஷயம் காட்டுத்தீயாக அவனது ப்ராஜெக்ட் டீமில் பரவியது. ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிப்பதை போல் விசாரித்துச் சென்றார்கள். அவர்களில் கடைசியாக வந்தான் PP. PP-யின் நிஜப்பெயர் பிரபு. “PP” என்பது செல்லமாக மக்களால் வைக்கப்பட்ட பெயர். “Playboy Prabhu” என்பதன் சுருக்கமே PP. அவனது சித்துவிளையாட்டில் சிக்காத பெண்கள் மிகவும் குறைவே. ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டால் பக்காவாக பிளான் போட்டு மடக்கி விடுவான்.
“என்ன வினோத்..? எப்படி இருக்க..?” என்று கூறியபடியே வினோத் கேபினுக்கு வந்தான் பிரபு. அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்.
“நல்லா இருக்கேன் PP.. என்ன விஷயம்..?”
“இல்ல.. ஏதோ பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ணி நீ மொக்க வாங்கிட்டன்னு கேள்விப்பட்டேன்.. அதான் யாரு அந்த பொண்ணுன்னு தெரிஞ்சிட்டு போகலாம்ன்னு வந்தேன்..”
“அதெல்லாம் உனக்கு ஒண்ணும் தெரிய வேணாம்.. நீ கெளம்பு..”
“சரி விடு.. ஒரு பொண்ண பிக்அப் பண்ணனும்னா எங்கிட்ட வந்து ஐடியா கேக்க வேண்டியதுதானே.. என் நாலேஜ் எல்லாம் யூஸ் பண்ணிக்கடா..”
“தேவைப்படும் போது கேட்டுக்குறேன்..”
“அதான் போயிடிச்சே.. சரி போனத விடுவோம்.. பியுச்சர்ல மறுபடியும் ஏதாவது லவ் பண்றதுக்கு முன்னாடி என் வெப்சைட்ட நல்லா படிச்சி வச்சிக்கோ..”
“என்ன வெப்சைட்..?”
“அடப்பாவி.. தெரியாதா..? தள்ளிக்கோ..” என வினோத்தின் கம்ப்யூட்டரில் தட்ட தொடங்கினான்.
“be-a-playboy.com இதான் என்னோட வெப்சைட். இதுல How to become a playboy in 30 days, Know your girl, How to manage more than 10 GF’s at a time இந்த மாதிரி நிறைய யூஸ்புல்லான ஆர்டிகல்ஸ் எழுதியிருக்கேன்.. படிச்சி பாரு.. இதெல்லாம் சீக்கிரம் புக்கா போடலாம்ன்னு ஒரு ஐடியா இருக்கு.. அப்படி வந்தா ஒன்ன மாதிரி லவ் பண்ண தெரியாதவனுகெல்லாம் யூஸ் ஆகும்..”
“PP எப்டிடா இதெல்லாம் பண்ற.. பாக்குறதுக்கு இப்ப தான் தொட்டில விட்டு எறங்கி வந்த குழந்தை மாதிரி இருக்க..”
“டேய்.. என்னை உன்ன மாதிரி டம்மின்னு நினைச்சியா.. இங்க பாரு..” என அவனது மொபைலின் வாட்ஸ்அப்பினை திறந்து காண்பித்தான்.
“பாத்தியா.. என்னோட கேர்ள் பிரெண்ட்ஸ் எல்லாத்தையும் ‘My Girlfriends’ ன்னு ஒரு குரூப் கிரியேட் அதுலயே எல்லார்கூடவும் பேசிட்டு இருக்கேன்.. அவங்க எல்லாருக்குமே தெரியும் என்னைபத்தி.. இருந்தாலும் டெய்லி எங்கிட்ட பேசிட்டு தான் தூங்க போவாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லார் கூடவும் கான்பிரென்ஸ் கால் போட்டு பேச போறேன்.. போடா.. டேய்.. இன்னும் லவ் கிவ்வுன்னு சுத்திகிட்டு..” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே போன் சிணுங்கியது.
“மோகனப்ரியா.. என்ன சீக்கிரம் கால் பண்ணிட்ட.. இது சரண்யா பேசுற நேரமாச்சே..” எனப் பேசிக் கொண்டே எழுந்துப் போனான் PP என்ற பிரபு. சிலையாய் அமர்ந்திருந்தான் வினோத்.
ரேகாவிடம் பேசி இருபது நாட்களுக்குப் பிறகு ஒரு நாள்.
கேன்டீனுக்குள் நுழைந்தான் வினோத். ரேகாவை அங்கே அவன் எதிர்பார்த்துவரவில்லை. ஆனால் அவள் அங்கே தனியாக அமர்ந்து ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தாள். வேண்டாமென மனதுக்குள் நினைத்தாலும் அவளை நோக்கி சென்றான் வினோத்.
“ரேகா.. உங்ககிட்ட பேசணும்..”
அவனை எதிர்பார்க்காத ரேகா சலிப்பும் கோபமும் கலந்த குரலில்,
“ஹலோ.. நான் தான் எனக்கு பிடிக்கலன்னு அன்னைக்கே சொல்லிட்..” என முடிப்பதற்குள் “எனக்கும் புடிக்கலங்க.. அத சொல்ல தான் வந்தேன்..” என்றான் வினோத்.
அவனது பதிலில் சற்று குழம்பிய ரேகா தடுமாற்றத்துடன்,
“சரி.. புடிக்கலனா.. போக.. வேண்டியதுதானே.. எங்கிட்ட ஏன் சொல்லிட்டு இருக்கீங்க..” என்றாள்.
“நான் புடிக்கலன்னு சொன்னது உங்கள இல்ல.. உங்க பின்னாடி இப்படி நான் சுத்துறத..”
“என்னங்க சொல்ல வரிங்க..”
“இங்க பாருங்க.. உங்க பின்னாடி சுத்தி சங்கடப்படுத்துறதுல எனக்கும் கொஞ்சமும் விரும்பம் இல்ல.. ஆனா உங்கள மறுபடியும் பாக்கும் போது உங்க கிட்ட பேசணும் உங்க கிட்ட பழகனும்னு தோணுது..”
“அதுக்கு இப்ப என்ன பண்ணனும்..”
“நல்லா கேட்டிங்க..” எனக் கூறிவிட்டு அவளுக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.
“இப்போ தாஜ்மகால் நமக்கு தான் ரொம்ப ஆச்சர்யமா அதிசயமா தெரியும்.. ஆனா அதுக்கு பக்கத்துலயே இருக்குறவங்களுக்கு தாஜ்மகால் ரொம்ப சாதாரணமான ஒண்ணு.. அதே மாதிரி இப்போ உங்ககிட்ட பேசாம தூரமா இருந்தே நான் பாத்துட்டு இருக்குறதால தான் நீங்க ஏதோ ஒரு அதிசயமா எனக்கு தெரியுரிங்க.. அதுவே டெய்லி உங்ககூட பேசிட்டு இருந்தா உங்க மேல இருக்குற அந்த பிரமிப்பு போய்டும்.. மே பி நீங்க ரொம்ப கோவக்கார பொண்ணாவோ, இது தான் இப்படி தான் அப்படின்னு அடம் புடிக்குற பொண்ணாவோ, எதுக்கெடுத்தாலும் சோகமாயிடுற பொண்ணாவோ இருக்கலாம்.. அதனால உங்கள புடிக்காம கூட போய்டலாம்.. ஸோ நாம பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்னா ரெண்டு பேருக்குமே நல்லது.. என்ன சொல்றிங்க..?”
“ஹலோ.. இத இத்தனை நாளா யோசிச்சிட்டு இருந்தீங்களா..? கேவலமா இருக்கு.. பேசாம போறிங்களா..? இல்லனா ஹச்.ஆர். பிரி..”
“தெரியும்ங்க.. ஹச்.ஆர்.பிரியங்கா உங்க ரிலேடிவ்.. அதானே.. ஏங்க.. லவ் உங்களுக்கு வேணாம் அப்டிங்கறதுல நீங்க ஸ்ட்ராங்கா இருக்கீங்கல..”
“ஆமா..”
“அப்றம் என்ன.. நாம பிரெண்ட்ஸா இருப்போம்..”
சிறிது நேரம் யோசித்தாள். “எப்படியோ நம்மள தொல்லை பண்ணாம இருந்தா சரி தான் என நினைத்தபடி”,
“ஓகே.. ஆனா லவ் அது இதுன்னு எங்கிட்ட வந்து பேசக் கூடாது.. அப்டி பேசுனா அதுக்கப்புறம் உங்ககிட்ட பேச மாட்டேன்..” என்றாள்.
“காட் ப்ராமிஸ்.. அந்த வார்த்தையே எடுக்க மாட்டேன்..”
“ஹ்ம்ம் சரி..”
“சரி.. அப்போ ப்ராப்பரா இன்ட்ரோ பண்ணிக்கலாமா.. என் பேரு வினோத். BE முடிச்சிருக்கேன்.. இங்க மூணு வருஷமா வொர்க் பண்றேன்.. சொந்த ஊரு திருச்சி..”
“என் பேரு ரேகா.. நானும் BE தான்.. சென்னை பொண்ணு.. இங்க ஜாயின் பண்ணி த்ரீ மந்த்ஸ் ஆச்சி..”
“இன்ட்ரோ கம்ப்லீட்.. அடுத்து..” என்றவன் எழுந்து கேன்டீன் கவுன்ட்டர் சென்று கோக் வாங்கிக் கொண்டு வந்தான்.
“ஒரு கோக் வாங்கியிருக்கேன்.. நீங்க ‘பே’ பண்ணிடுங்க.. நெக்ஸ்ட் டைம் நான் உங்களுக்கு ‘பே’ பண்ணுறேன்.. Bye” எனக் கூறிவிட்டு எழுந்து சென்றான்.
ரேகா அவன் செய்கையை நம்ப முடியாமல் வினோத் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(தொடரும்..)
கருத்துகள்