நான் சுசீந்திரன் படங்களின் ரசிகன். காரணம் கமர்ஷியல் சினிமாவில் கொஞ்சமேனும் "ரியலிசம்" கலப்பவர் என்பதால். அது செண்டிமெண்ட் காட்சியாகட்டும், ஆக்சன் காட்சியாகட்டும். படம் பார்க்கும் ரசிகனை திரையில் தெரியும் ஹீரோவை தன்னில் ஒரு பாதியாய் சில காட்சிகளேனும் உணரச் செய்துவிடுவார். அதனால் தான் அவரின் நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஆதலால் காதல் செய்வீர் போன்ற படங்களை எனக்குப் பிடித்திருந்தது. அவரின் ராஜ பாட்டையை இங்கே மறந்து விடுவது உத்தமம். பாண்டிய நாடு படத்துக்கு பின் சுசீந்திரன் மற்றும் விஷால் இணைந்திருக்கும் படம் என்று மிக எதிர் பார்த்தேன். Full மீல்ஸ் சாப்பிட போய் லிமிடெட் மீல்ஸ் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது இந்த "பாயும் புலி". நல்ல பவர் புல்லான டைட்டில்.
அண்டர்கவர் போலீஸ் விஷால் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிடிக்க நியமிக்கப்படுகிறார். ஆனால் வழக்கமான தமிழ் பட ஹீரோ பார்முலா மாறாமல் பார்த்த கணமே நாயகியுடன் காதலில் விழுந்து கடமைக்கு நடுநடுவே காதல் செய்கிறார். பாசமான, ஊர் மக்கள் மத்தியில் நற்மதிப்பு கொண்ட ஹீரோவின் குடும்பத்திலேயே தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் அரசியல் ஆசை கொண்ட அண்ணன் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனி தான் குற்றவாளி என்பதை விஷால் கண்டுபிடித்தாரா..? சத்தியமா கண்டுபிடித்துவிடுவார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அது எப்படி என்பதை 2 மணி 15 நிமிடத்தில் சொல்லும் படம் தான் பாயும் புலி.
வழக்கமான ஆக்சன் ஹீரோவாக விஷால். கொஞ்சூண்டு லூசு தனம் கலந்த ஹீரோயினாக காஜல். பல படங்களில் பார்த்து சலித்து போன ஹீரோயினை ஹீரோ உஷார் பண்ணும் சில காட்சிகள். ஹீரோவின் நண்பனாக சுத்திக் கொண்டு அங்கே அங்கே கவுண்டர் கொடுக்கும் காமெடியனாக சூரி. குடும்பத்தில் பாசமான அண்ணனாகவும், பொறுப்பான மகனாகவும், ரவுடி கும்பலின் தலைவனாக இரக்கம் இல்லாத வில்லனாகவும் சமுத்திரக்கனி. நடிப்பில் யாரும் குறை வைக்கவில்லை. சூரியின் காமெடி சில இடங்களில் மட்டுமே சிரிக்கும் படி இருந்தது.
இன்னும் எத்தனை நாட்கள் நம் தமிழ் பட இயக்குனர்கள் ஹீரோ முதன் முதலில் ஹீரோயினை பார்த்ததும் ஒரு பாட்டு, காதல் தொடங்கியதும் ஒரு பாட்டு, காதலின் நடுவே ஒரு பாட்டு என்று வைத்து நம்மை சாகடிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மெதுவாக செல்லும் படத்தை மேலும் மெதுவாக்கவே இந்த பாடல்கள் உதவுகின்றன. "சிலுக்கு மரமே" பாடல் மட்டுமே ரசிக்கும் படி இருந்தது. மற்றவை மறந்துவிடலாம்.
சுசீந்திரன் டச் சில காட்சிகளில் நன்றாக இருந்தது. படத்தின் ஆரம்பத்தில் ரௌடிகளால் கொல்லப்பட்ட போலீசின் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி,போட்டோவை வைத்து சமுத்திரக்கனி மீது விஷால் சந்தேகப்படும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி, என்று சில காட்சிகளால் படம் ரொம்ப மோசமில்லை என்ற முடிவுக்கு நம்மை கொண்டு செல்கிறது.
கடைசியா ஒரு வரி. பாயும் புலி - பாய்ச்சல் குறைவு

கருத்துகள்