சொன்னா புரியாது



புதுசா ஒரு படம் ரிலீஸ் ஆச்சினா என் பிரண்ட்ஸ்  படம் எப்டி இருக்குன்னு என்கிட்ட தான்  கேப்பாங்க... நான் ஒன்னும் ப்ரீவியு  ஷோ எல்லாம் பாத்திருக்க மாட்டேன் ... படத்தோட முதல் ஷோ முடிஞ்சதுமே இப்ப தான் ரிவியூ வந்துடுதே... அத படிச்சிட்டு அவங்களுக்கு படம் பத்தின தகவல கொடுப்பேன்... இத ஒரு பொது சேவையா நினைச்சி பண்ணிட்டு வரேன்... அப்டி நல்லா  இருக்குனு சொல்லி படத்துக்கு என் நண்பர்கள் கூட்டிட்டு  போய் படம் புடிக்காம  அவனுங்க கிட்ட அடிவாங்குன சம்பவங்கள் நிறைய... அதப் பத்தி எழுதுறதுனா எழுதிட்டே போகலாம்.. அவளோ இருக்கு... கொஞ்ச நாளா  இந்த மாதிரி சம்பவத்துல மாட்டாம இருந்தேன் ... ஆனா இந்த சொன்னா புரியாது படத்துல மாட்டிகிட்டேன்...


சிவா ஆங்கில படங்களுக்கு தமிழ் குரல் கொடுக்குற டப்பிங்  ஆர்டிஸ்ட்.... கல்யாணம் அப்டிங்கற சிக்கல்ல மாட்டிக்காம வாழ்க்கைய என்ஜாய் பண்ணனும்னு நினைக்குறவர்.. அம்மாவோட எமோசனல் பிளாக்மெயிலுக்கு பயந்து கல்யாணம் பண்ணிக்க சிவா சம்மதிக்க அவருக்கு பாக்குற பொண்ணு தான் வசுந்தரா... கல்யாணம் நிச்சயம் ஆகிடுது... ஆனா இந்த கல்யாணத்துல வசுந்தராக்கும் சம்மதம் இல்லன்னு சிவாக்கு தெரிஞ்சதும் ரெண்டு பெரும் சேர்ந்து இந்த கல்யாணத்த நிறுத்த பிளான் பண்றாங்க... கல்யாணத்த நிறுத்துனாங்களா...? இல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா..? இது தான்  சொன்ன புரியாது..

கதை என்னமோ பழசு தான்... ஏற்கனவே மாதவன், ஜோதிகா நடிச்சி வந்த "டும் டும் டும் " படக் கதை.. காமெடியா சொல்லி படத்த ரசிக்க வைக்க முயற்சி பண்ணிருக்காங்க.. அதுல பாதி சக்சஸ் ஆகிருக்காங்க.. இப்டி சொல்றேனா அதுக்கு முழுக் காரணம் சிவா தான்.. எல்லா டயலாக்ஸ்க்கும் ஒரே மாதிரியான ரியாக்சன்ஸ்... ஆனாலும் ரசிக்க முடியுது... வசுந்தரா நடிப்பும் சரி அழகும் சரி சுமார் தான்... சிவா பிரண்டா வர ப்ளேடு சங்கர் உண்மையாவே ப்ளேடு தான்... அந்த குண்டா வர பையன வச்சி சில இடத்துல சிரிக்க வைக்குறாங்க..

படத்துல பிளஸ்னு சொல்லனும்னா சிவா மட்டும் தான்... மைனஸ்னு சொல்லனும்னா ஏகப்பட்டது இருக்கு... எப்பவும் ஆங்க்ரி பேர்ட் விளையாடிட்டே இருக்குற பாட்டி கேரக்டர்... செம்ம கடுப்பா இருந்தது... அப்புறம் அந்த குண்டு பையன்... குண்டா இருந்தா எப்பவும் சாப்ட்டுக்கிட்டே தான் இருப்பாங்களா... குண்டா இருந்தா சாப்டுறத தவிர வேற வேலையே இருக்காதா... புதுசா யோசிங்க பாஸ்... அப்புறம் சாம் ஆண்டர்சன்... அவரைக் கலாய்ச்சி காமெடி பண்றேன்னு செம்ம மொக்க சீன் பண்ணிருக்காங்க... கடுப்பேத்துறாங்க மை லார்ட்... ரொம்ப நாடகத்தனமா இருந்தது நிறைய சீன்ஸ்.. என்ன தான் காமெடி படம்னாலும்  இப்டியா லாஜிக் இல்லாம கண்டபடி மொக்க போடுறது... இந்த படத்துக்கு கூட்டிட்டு போனேன்னு என் பிரண்ட்ஸ் எல்லாம் ஏதோ கொலைகாரணப் பாக்குற மாதிரி படம் முடியுற வரைக்கும் பாத்துட்டே இருந்தாங்க... இசை , ஒளிப்பதிவு எல்லாமே சுமார் ரகம் தான்...


மொத்ததுல சிவா இல்லனா இந்த படம் அதோ கதி தான்... 

கருத்துகள்