நம்
எல்லோருக்கும் இயக்குனர் சேரன் அவர்களை தரமான படங்களை இயக்கும் ஒரு இயக்குனராகவும் ஒரு நடிகராகவும்
மட்டுமே தெரியும்... ஆனால்
சினிமா எனும் வானில் சிறகு விரிக்க எண்ணற்ற அவமானகளையும் வலிகளையும் சுமந்து
திரிந்த இளஞ்சேரன் எனும் இளைஞன் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது... அந்த
இளைஞனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது இந்த "டூரிங்
டாக்கீஸ்"
மிக நீண்ட
நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகம் படிக்கும் போது துக்கம், சந்தோசம், உற்சாகம் என்ற அத்தனை உணர்வுகளையும்
ஒருசேர பெற்றேன்... ஒரு
நல்ல வாசிப்பனுபவத்தை இந்த புத்தகம் கொடுத்தது... சேரனின்
திரைப்படம் போன்றே இந்த புத்தகமும் ஒரு நேர்மையான படைப்பு... விடாமுயற்சியும்
தளர்ந்து போகாத மனமும் உடைய ஒருவன் என்றும் தோற்றுப் போவதில்லை... அதை
ஆணித்தரமாகச் சொல்லும் மற்றுமொரு வெற்றியாளனின் கதை...

கருத்துகள்