பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா


அபூர்வ ராகத்தில் பிறந்த எங்கள் அதிசய பிறவியே...
எளிமை என்ற சொல்லின் எஜமானே...!
வியர்வைத்துளிகளை விதைத்து வெற்றிகளை ருசித்த வீரா..!
எதிரிகளைக்கூட ஏற்றிவிடத் துடிக்கும் எந்திரனே...!
தலைவா என்று உன்னை அழைப்பதில் தலைக்கனம் கொள்கிறோம் நாங்கள்...!
திரையில் உன் பிம்பம் காணும் பொழுதெல்லாம் தித்திக்கும் எங்கள் நிமிடங்கள்...!
கைவிரல் அசைத்து நீ வார்த்தைகள் உதிக்கும் அழகில் வசியம் பெறும் உன்னை வாசிக்கும் எங்கள் விழிகள்..!
அகவை உனக்கு அறுபதை தாண்டினாலும் அழகு தான் நீ என்றும் எங்களுக்கு...!
மறுபிறவி ஒன்று இருந்தால் மன்னன் நீ மீண்டும் வர வேண்டும்..!
எங்கள் மனங்களை ஆள வேண்டும்...!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா..!!

கருத்துகள்

Alex Ezhilarasan இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கவிதை. மேலும் தொடர என் நல்வாழ்த்துக்கள்.