திங்கள், 2 பிப்ரவரி, 2015

180 கோடியில் பிறந்திருக்கும் ஷங்கரின் புதிய சினிமா குழந்தை.. இந்திய சினிமாவின் மிகவும் காஸ்ட்லியான திரைப்படம்.. உடலை வருத்தி தன்னை முழுவதும் விக்ரம் அர்ப்பணித்துக் கொண்ட திரைப்படம்.. சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கிடந்த திரைப்படம்.. எப்படி இருக்கிறது இந்த “ஐ”.

கதையின் சுருக்கத்தை எல்லோரும் இந்நேரம் தெரிந்து வைத்திருப்பீர்கள்.. அதனால் எனது அனுபவத்தை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்..
படம் பார்த்த மற்ற நண்பர்களிடம் இருந்து “படம் சரியில்லை”, “எதிர் பார்த்த லெவெலுக்கு இல்லை”, “பர்ஸ்ட் ஹால்ப் ஸ்லோ”, “விக்ரம் மட்டும் நல்லா நடிச்சிருக்கான்” என்று ஏகப்பட்ட கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனால் படம் எனக்கு பிடித்தே இருந்தது.. ஷங்கரின் “அந்நியன்” என்னை அந்த அளவுக்கு கவர்ந்ததில்லை.. ஆனால் இந்த படம் எனக்கு பிடித்திருந்தது.. அதற்க்கு காரணம் P.C. ஸ்ரீராமின் ஒளிப்பதிவா, A.R. ரகுமானின் இசையா, விக்ரமின் அசத்தலான நடிப்பா, அல்லது ஷங்கரின் இயக்கமா என்றெல்லாம் ஆராய விருப்பமில்லை..

விக்ரம் தவிர இந்த படத்தை வேறு யாரும் இத்தனை சிறப்பாக செய்திருக்க முடியாது என்ற முடிவுக்கு நம்மை இட்டு செல்கிறது விக்ரமின் உழைப்பு.. பாடி பில்டராக கம்பீரம் காட்டுவதிலும் சரி, விளம்பர மாடலாக ஸ்டைல் காட்டுவதிலும் சரி, வைரஸால் பாதிக்கப்பட்ட கூனனாக மருகுவதிலும் சரி மனிதர் வெளுத்து வாங்குகிறார்.. படம் பிடிக்கவில்லை என்று சொன்னவர்கள் கூட விக்ரமின் நடிப்பையும் உழைப்பையும் பாராட்ட தவறுவதில்லை...

ஏமி ஜாக்சன்.. தமிழ் தெரிந்த நடிகைகளே முகத்தில் நடிப்பை காட்ட தவறும் காலத்தில் லண்டனில் இருந்து வந்த ஏமி இந்த அளவிற்கு நடித்ததே பெரிய விஷயம்.. ஆனால் க்ளோஸ்அப் காட்சிகளில் உதட்டு அசைவு தான் தமிழுக்கு பொருந்தாமல் உறுத்தலாக இருந்தது..
சந்தானம்.. வழக்கம் போல் அங்கங்கே ஒன் லைனர்களை போட்டு சிரிப்பை வரவழைத்து விடுகிறார்.. திருநங்கை, விக்ரம் மேல் காதல் கொள்ளும் காட்சிகள் தான் கொஞ்சம் அறுவையாக இருந்தது.. திருநங்கைகளை இன்னும் எத்தனை படங்களில் அவர்களை இப்படிக் காட்டி கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக்குவார்கள் என்று தெரியவில்லை..

“மெரசலாயிட்டேன்” பாடல் ரசிக்கும் விதமாக படமாக்கபட்டிருக்கிறது.. “பூக்களே சற்று ஓய்வெடுங்கள்” பாடலின் லோகேசன்ஸ் திரையை விட்டு நம் பார்வையை நகர விடாதபடி செய்கிறது... சண்டைக்காட்சிகள் சூப்பர்... P.C. ஸ்ரீராம், A.R. ரகுமான் இருவரும் ஷங்கரின் “ஐ” க்கு பெரும் பில்லர்ஸ் என்றே சொல்லவேண்டும்... இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து, ஷங்கரின் கனவுக்கு கோடிகளை கொட்டி உயிர் கொடுத்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் பாராட்டப் பட வேண்டியவர்..

இந்த கால ரசிகர்கள் எல்லாம் செம்ம ஷார்ப்.. அதனால் படத்தில் ஷங்கர் வைத்திருக்கும் பல சஸ்பென்ஸ்களை அவர் உடைக்கும் முன்பே ரசிகர்கள் உணர்ந்து கொள்கிறார்கள்.. ஆனால் அது பெரிய குறையாக தெரியவில்லை..


மொத்தத்தில் “ஐ” எல்லா தரப்பு மக்களையும் திருப்தி செய்யாவிடினும் என்னை போன்ற (நான் எப்படி போன்றவன் என்பது முக்கியம் இல்லை) ரசிகர்களை திருப்தி செய்து விடும்.. 

Posted on முற்பகல் 6:45 by Elaya Raja

No comments

மிகவும் எதிர்பார்த்துக் கிடந்த புத்தகக் கண்காட்சிக்கு திட்டமிட்டபடி செல்லமுடியாமல் தாமதமாகி விட்டது... ஆனால் தவறவிடாமல் சென்று வந்ததில் இப்பொழுதுதான் நிம்மதி... என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று குறித்துவைத்த சில புத்தகங்கள் வாங்கினேன்... பல புத்தகங்கள் பொருளாதார சூழலால் வாங்க இயலாமல் போய்விட்டது... போன வருட புத்தக கண்காட்சியில் வாங்கியதே இன்னும் படித்து முடிக்கப்படாமல் செல்பில் தூங்குவதால் சரி இந்த முறையும் வாங்கி தூங்க வைக்க வேண்டாம் என்பதாலும் லிஸ்டில் இருந்த சில புத்தகங்களை விட்டுவிட்டேன்.. இதோ நான் வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட் :
·         வாலி 1000 – கவிஞர் வாலி எழுதிய ஆயிரம் பாடல்களின் தொகுப்பு.. எல்லா விதமாகவும் பாடல்கள் எழுதும் வாலியின் வாலிப வரிகளின் தொகுப்பு...
·         6174 – க.சுதாகர் எழுதிய முதல் புதினம்.. சமூகத் தள நண்பர்கள் பலர் படித்து விட்டு பாரட்டிருந்த புத்தகம்.. அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வாங்கினேன்.. முதலில் படிக்க இருப்பதும் இதுவே தான்..
·         7.83 ஹெர்ட்ஸ் – க.சுதாகர் எழுதியிருக்கும் இரண்டாவது புதினம்.. இந்த புத்தகம் பற்றி எதுவும் தெரியாது.. எனது லிஸ்டிலும் கிடையாது.. ஆனால் பார்த்ததும் வாங்கிவிட்டேன்...
·         லிண்ட்சேலோகன் w/o மாரியப்பன் – வா.மணிகண்டன் எழுதிய மின்னல் கதைகள்.. வா.மணிகண்டனின் “நிசப்தம்” வலைதளத்தை வாசித்ததுண்டு.. பல பதிவுகள் ரசிக்கும் படி இருக்கும்.. போன புத்தகக் கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்டேன்.. அதனால் இந்த முறை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்து வாங்கிவிட்டேன்..
·         மிளிர்கல் – ரா.முருகவேள் எழுதியிருக்கும் புதினம்.. “எரியும் பனிக்காடு” என்ற இவரின் மொழிபெயர்ப்பு நாவலை வாசித்திருக்கிறேன்.. ஆனந்த விகடனில் விருது பெற்றிருந்த நாவல் என்பதால் பார்த்ததும் வாங்கிவிட்டேன்..
·         ஆறாம் திணை – கு.சிவராமன்.. ஆனந்த விகடனில் மருத்துவர் கு.சிவராமன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
·         இன்னொருவனின் கனவு – குமரகுருபரன்
·         மர்மயோகி நாஸ்டிராமஸ் – கார்த்திக் ஸ்ரீநிவாஸ்


எப்படியாவது இந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களையும் போன முறை வாங்கிய புத்தகங்களையும் அடுத்த புத்தகக் கண்காட்சி வருவதற்குள் வாசித்து விடவேண்டும்.. பார்ப்போம்...

Posted on முற்பகல் 6:36 by Elaya Raja

No comments