திங்கள், 28 ஜூலை, 2014

இந்த மாதம் ஒவ்வொரு வாரமும்  ஒவ்வொரு திரைப்படம் திரை அரங்கினில் பார்த்தேன்... அவைகள் அரிமாநம்பி, வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை ஆகும்... நான் திரைஅரங்கில் சென்று படம் பார்க்கவே பெரிதும் விரும்புவேன்.. ஆனால் பொருளாதார சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்காமல் டவுன்லோட் செய்து பார்க்க வைத்து விடும்... இந்த மாதம் எப்படியோ மூன்று படங்கள் திரைஅரங்கில்  பார்த்தாகி விட்டது... அடுத்த மாதம் அஞ்சான், ஜிகர்தண்டா என்று பார்க்க வேண்டிய லிஸ்டில் உள்ள அணைத்து படங்களும் வெளிவர உள்ளதால் கடன் வாங்க இப்பொழுதே ஒரு ஆளை பிடிக்க வேண்டும்... 

நான் பார்த்த வேலையில்லா பட்டதாரி , சதுரங்க வேட்டை படங்கள் பற்றி சிறிது பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.. முதலில் வேலையில்லா பட்டதாரி..


இந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... காரணம் எந்த இடத்திலும் போர் அடிக்காமல் படத்தை நகர்த்தி சென்றது... தனுஷ் கதாபாத்திரம் படித்து முடித்து விட்டு இருந்த VIP, இருக்கும் VIP, இருக்கப்  போகும் VIP அனைவரும் அவர்களோடு relate செய்து கொள்ளும்படி இருந்தது படத்தின் ஆகச்சிறந்த பலம்.. ரகுவரன் படத்தில் செய்யும் சிலவற்றை நானும் படித்து முடித்துவிட்டு வெட்டியாக இருக்கும் போது செய்திருக்கிறேன் என்ற வகையில் முதல் பாதி முழுக்க நம்மில் ஒருவனை திரையில் பார்ப்பதை போன்ற ஒரு உணர்வே தோன்றியது.. இரண்டாம் பாதியில் ஹீரோ தனுஷ் தோன்றியதும் அந்த உணர்வு தானாக அறுபட்டு போனது... அம்மா என்ற உறவு இருக்கும் வரை படங்களில் அம்மா செண்டிமெண்ட்  தோற்று போக வாய்ப்பில்லை என்று தான் கூறவேண்டும்... இந்த படத்தில் அது நன்றாகவே கையாளப்பட்டிருக்கிறது... விவேக் இரண்டம் பாதியில் வந்தாலும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.. வசனங்கள் பல இடங்களில் ரசிக்கும் படி இருந்தது... படத்தில் மிகபெரும் தூண் அனிருத் இசை... அதற்க்கு சாட்சி பாடலுக்கு திரைஅரங்கில் ஆட்டம் போட்ட ரசிகர்களே... பழைய கதை தான் என்றாலும் அதை ரசிக்கும் படி கூறி இருந்தது படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறது...


அடுத்து சதுரங்க வேட்டை.. படம் பற்றி வெளிவந்த விமர்சனங்கள் இதை திரை அரங்கில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டவே சென்று பார்த்தேன்... மக்களின் பணத்தாசையை பயன்படுத்தி ஒருவன் பணம் சம்பாதிப்பது என்ற கருவினை எடுத்துக் கொண்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதை போல் ஒரு திரைப்படம்... இப்படி ஒரு அருமையான கதையினை தேர்வு செய்து முதல்முறையாக தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கும் மனோபாலாவை தாரளாமாக பாராட்டலாம்... மண்ணுளிபாம்பு, MLM, பாதி விலையில் தங்கம், ரைஸ் புல்லிங், ஈமு கோழி என்று தமிழ்நாட்டில் நடந்த, நடக்கும், நடக்க போகும் அணைத்து விஷயங்களையும் அலசி இருக்கிறார்கள்.. படத்தின் பலம் பட்டையை கிளப்பும் வசனங்கள்.. ஹீரோவாக நடித்திருக்கும் நட்டி குறை சொல்ல முடியாத நடிப்பு... நன்றாகவே செய்திருக்கிறார்.. இரண்டு பாடலோடு நிறுத்திக் கொண்டது நிம்மதியாக இருந்தது... மண்ணுளிபாம்பு, MLM இரண்டும் நீளமாக இருந்தது சற்று நாடகத்தன்மை கூட்டியது... ஆனால் அதன் பிறகு விறுவிறுப்பாகவே சென்றது... சில இடங்களில் லாஜிக் மீறல் இடறியது... இத்தனை பெரிய மோசடி செய்த நட்டி விடுதலை ஆகி ஹாயாக கோர்ட் வாசலில் நடந்து வருவது, தமிழகமே உற்று கவனித்த மோசடி மன்னன் நட்டி பற்றி மதுரையில் பெரும்புள்ளியாக இருக்கும் அந்த பெரிய மனிதர் மட்டும்  தெரிந்து கொள்ளாமல் அவர் சொல்வதை எல்லாம் நம்புவது, இவை எல்லாம் படம் பார்க்கும் போது உறுத்தியது... ஆனால் அவை படத்தின் வேகத்தை பெரிய அளவில் பாதிக்கவில்லை... நிச்சயம் பார்க்ககூடிய ஒரு படமே இந்த சதுரங்க வேட்டை...

Posted on முற்பகல் 12:10 by Elaya Raja

No comments

புதன், 9 ஜூலை, 2014

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர்... முதல் பத்து நிமிடம் நிதானமாக செல்லும் காட்சிகள் பிறகு வேகம் பிடிக்கின்றன.. கதை பழையது என்றாலும் சொல்லிருக்கும் விதம் படத்தினை ரசிக்க  வைக்கிறது... பாடல்கள் பயங்கர மொக்கை... பின்னணி இசை பல இடங்களில் நன்றாக இருந்தது.. விக்ரம் பிரபு ஆக்சன் காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார்... அவரின் உடல்வாகு பெரிய பிளஸ்.. ஆனால் காதல் காட்சிகளில் சொய்ங் என்று மூஞ்சை வைத்துக் கொள்வது பெரிய மைனஸ்... பிடித்த காட்சிகள்:
* பேங்க் கொள்ளையடிப்பதைப் போல் நடித்து ரௌடிகளை போலீசிடமிருந்து தப்புவிப்பது..
* M S பாஸ்கர் ரௌடிகளிடமிருந்து விக்ரம் பிரபுவை காப்பாற்றுவது 
* விக்ரம் பிரபு போலீசை திசை திருப்பும் கிளைமாக்ஸ் காட்சிகள் 

கொடுத்த காசுக்கு நிச்சயம் திருப்தி கொடுக்கும் ஒரு படம். 

Posted on பிற்பகல் 10:32 by Elaya Raja

No comments