"சொந்தமாக தொழில் தொடங்கி நடத்துவதென்பது நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் அல்ல.. அது ஒரு நீண்ட மராத்தான்... அதில் சளைக்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்... "- இன்போசிஸ் நாராயணமூர்த்தி.


சோர்ந்துக் கிடந்த மூளைக்கு க்ளுகோஸ் ஏற்றியதை போல் இருந்தது இன்போசிஸ் நாராயணமூர்த்தி பற்றிய இந்த புத்தகம்.. கிழக்கு பதிப்பகத்தில் இருந்து வெளிவரும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு எப்பொழுதும் சிறிய அளவிலான புத்தகங்களாகவே இருக்கும்.. ஆனால் ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தைப் போல் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கும்.... இன்போசிஸ் நாராயணமூர்த்தி பற்றிய இந்த புத்தகமும் என்.சொக்கன் அவர்களின் விறுவிறுப்பான எழுத்து நடையில் அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது... ஒரு மாபெரும் கணினி துறை சார்ந்த நிறுவனத்தின் சேர்மனாக இருப்பினும் கம்யூனிசம் சார்ந்த சிந்தனையால் மக்களுக்கு பயன்படும்படி அவர் சேவை புரிந்து வருவது மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம்... சொந்த தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல்.. உங்கள் தன்னம்பிக்கையின் அளவை இந்த நூல் சற்று உயர்த்திவிடும்...