செவ்வாய், 29 ஏப்ரல், 2014

தமிழ்நண்பர்கள் தளத்தில் முதலிரவு என்ற தலைப்பிலும் உள்ளிருந்து ஒரு குரல் என்ற தலைப்பிலும் இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளேன்... நண்பர்கள் படித்து தங்கள் கருத்துகளை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்... 

Posted on முற்பகல் 3:02 by Elaya Raja

No comments

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

நேற்று இரவு சோனி பிக்ஸ் சேனலில் "Tolhotblond" என்றொரு திரைப்படம் பார்த்தேன்.. மொபைலில் சாட்டிங் செய்தபடி நடந்து வரும் இளைஞன் ஒருவன் தன் காரைத் திறந்து டிரைவிங் சீட்டில் அமர்கிறான்.. அவனைப் பின்தொடர்ந்து வரும் ஒருவன் அந்த இளைஞனை சுட்டுக் கொள்கிறான்.. காட்சிகள் பிளாஷ்பாக்காக விரிகிறது.. கொல்லப்பட்ட இளைஞன் பெயர் பிரைன்.. அவன் வேலைப் பார்க்கும் தொழிற்சாலையில் உடன் பணிபுரிபவன் தாமஸ் என்ற 47 வயது நெருங்கியவன்.. தாமஸ், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், மற்றும் ஷடொவ் என்ற நாய் சகிதம் மகிழ்ச்சியான வாழ்கை வாழ்கிறான்.. பெரும் வசதி இல்லை என்றாலும் வறுமையில் உழலாமல் வாழும் நடுத்தர வர்க்கம்.. பணி முடிந்து வரும் தாமஸ் மாதத்தில் ஒரு நாளை தவிர மற்ற நாட்களில் தன் குடும்பத்துடன் இன்பமாகவே கழித்து வருகிறான்.. ஒரு நாள் மட்டும் பிரைன் மற்றும் தன்னுடன் பணிபுரியும் சிலருடன் இணைந்து போக்கர் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறான்.. அதுபோல் ஒரு நாள் நண்பர்களுடன் விளையாடும் போது அதில் ஒருவன் இணைய தளத்தில் நாங்கள் தினம் போக்கர் விளையாடுகிறோம்.. நீயும் ஏன் அதில் இணைந்து கொள்ள கூடாது என்று தாமசை கேட்க வீட்டில் ஒரே ஒரு கணினி மட்டுமே இருப்பதாகவும் அதை தனது மனைவி தினம் உபயோகிப்பதாகவும் கூறுகிறான்.. இருந்தாலும் அந்த நண்பன் விடாமல் அந்த இணையதளத்தின் முகவரியைக் எழுதிக்  கொடுத்து அதில் ஒரு கணக்கை துவங்கச் சொல்கிறான்.. அடுத்த நாள் தாமஸ் அந்த இணையதளத்திற்கு சென்று ஒரு கணக்கை துவங்கி தன் நண்பர்களுடன் இணைந்து விளையாடிக் கொண்டே நண்பர்களுடன் சாட்டிங் செய்கிறான்... அந்த இணையதளம் அவனுக்கு மிகவும் பிடித்துப் போகிறது... அவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணிடம் இருந்து பிரைவேட் சாட்டிங் அழைப்பு வருகிறது.. சிறிது யோசனைக்குப் பிறகு அதைக் ஏற்றுக் கொள்ளும் தாமஸ் அந்த பெண்ணிடம் சாட் செய்ய தொடங்குகிறான்... தன் பெயர் தாமஸ் என்றும்  25 வயது இளைஞன் என்றும்  மரைன்ல் பணிபுரிவதாகவும் கூறுகிறான்.. 20 வருடங்களுக்கு முன்பு தாமஸ் அங்கு தான் பணிபுரிந்திருப்பன்... அவள் தன் பெயர் கேட்டீ(katie) என்றும் கூறுகிறாள்... சிறிது நேர சாட்டிங் பிறகு நீ எப்படி இருப்பாய் என்று தாமஸ்  கேட்க அந்த பெண் தன் போட்டோவை அனுப்பி வைக்கிறாள்.. அதில் இருக்கும் அவளுடைய அழகிய பிம்பத்தைக் கண்டு மயங்குகிறான்.. அந்த பெண் தாமஸ் போடோவைக் கேட்க தன் இளம் வயதில் எடுத்த போட்டோவை மறுநாள் ஸ்கேன் செய்து அந்த பெண்ணுக்கு அனுப்பி வைக்கிறான்.. இவ்வாறு இருவரும் தினமும் இரவு நீண்ட நேரம் சாட்டிங் செய்ய தொடங்குகிறார்கள்.. தொழிற்சாலையில் பிரைன் அந்த பெண்ணை பற்றிக் கேட்க அவனை விலக்க தொடங்குகிறான்.. தாமஸ் நீண்ட நேரம் கணினியில் அமர்ந்திருப்பது கண்டு சந்தேகம் கொள்ள தொடங்குகிறாள் தாமஸின் மனைவி கரோல்(Carol).. ஒருநாள் கரோல் நீண்ட நேரம் கணினியில் அமர்ந்திருப்பதால் அவளிடம் கணினிக்காக வாக்குவாதம் செய்யத் தொடங்குகிறான் தாமஸ்.. மறுநாளே தாமஸ் ஒரு லேப்டாப் வாங்கிவிட ஏற்கனவே ஒரு கணினி இருக்கும் போது எதற்க்காக லேப்டாப் என்று அவனுடன் சண்டை செய்ய தொடங்கிறாள் கரோல்.. பிறகு சமாதானமாகிறாள்... தாமஸ், கேட்டீ இருவரும் சாட்டிங் காதலை பரிமாறிக் கொள்கிறார்கள்.. கரோலுக்கு சந்தேகம் வலுக்கவே தாமஸ் இல்லாத போது லேப்டாப் திறந்து பார்க்கிறாள்.. அதில் தாமஸ் அந்த பெண்ணுடன் செய்த சாட் அனைத்தையும் சேமித்து வைத்திருக்க எல்லாவற்றையும் படித்துவிடுகிறாள்.. படித்ததும் தாமஸ் திருமணமான 47 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பன் என்ற உண்மையை அந்த பெண்ணிடம் சாட்டிங்கில் கூறிவிட்டு  போட்டோ ப்ரூப் சகிதம் அவளுக்கு கடிதம் அனுப்பி விடுகிறாள்.. தாமஸ் இல்லை என்றால் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் தான் மட்டும் இல்லாமல் தன் பிள்ளைகளும் பாதிக்கபடுவார்கள் என்று தாமசை காரேஜில் படுத்துக் கொள்ள சொல்கிறாள் கரோல்.. கொஞ்ச நாள் நன்றாக இருக்கும் தாமஸ் மீண்டும் ஒரு நாள் கேட்டீயுடன் சாட்  செய்ய தொடங்குகிறான்.. தான் கூறிய பொய்களுக்காக கேட்டீயிடம் மன்னிப்பு கேட்க்கும் தாமஸ் நாம் நண்பர்களாக தொடர்வோமா என்று அந்த பெண்ணிடம் கேட்க அவளும் ஒப்புக் கொள்கிறாள்.. ஆனால் அவள் ப்ரைனுடன் இணைந்து போக்கர் விளையாடுகிறாள்.. அவனுடன் சாட்டிங் செய்கிறாள்.. இதை வெறுக்கும் தாமஸ் பிரைன் தவறானவன் என்று கேட்டீயிடம் கூற அவள் தாமஸ் கூறுவதை நிராகரிக்கிறாள்.. இதனால் கோபம் கொள்ளும் தாமஸ் ப்ரைனுடன் தொழிற்சாலையில் சண்டையிடுவதைப் பார்க்கும் மேற்ப்பார்வையாளர் இருவரையும் கண்டித்து அனுப்புகிறார்.. தாமஸ் ஒரு பெண்ணுடன் சாட்டிங் செய்து ஏமாற்றியது எல்லோருக்கும் தெரிந்து விட எல்லோரும் தொழிற்சாலையில் தாமசை வெறுப்பது போல் பார்க்க கோபம் கொள்ளும் தாமஸ் நைட் ஷிப்ட் இருப்பதாக காரோளிடம் பொய் சொல்லிவிட்டு தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தன் தொழிற்சாலை நோக்கி செல்கிறான்.. வேலை முடிந்து வரும் ப்ரைனை சுட்டு கொன்றுவிட்டு துப்பாக்கி, லேப்டாப் இரண்டையும் ஒரு ஆற்றில் தூக்கி எரிந்து விட்டு வீடு செல்கிறான்.. தன் பிள்ளைகளையும், காரோளையும் அழைத்துக் கொண்டு நைட் கேம்ப் என்று வெளியே கூட்டிச்   செல்கிறான்.. விசாரணை செய்யும் போலிஸ் தாமசை வட்டமிடுகிறது...  கேம்ப் முடிந்து வீட்டுக்கு வரும் தாமசை விசாரணைக்கு அழைத்து செல்கிறது... அங்கு தாமஸ் அவர்களின் விசாரணைக்கு பதில் சொல்ல மறுக்க அதிகாரி ஒருவர் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் போட்டோவை காட்டி இவர் யாரென்று தெரிகிறாதா என்று கேட்கிறார்.. இல்லை என்று கூறும்  தாமஸிடம் இவர் தான் இணையதளத்தில் உன்னுடன் கேட்டீ என்ற பெயரில்  சாட் செய்தவர் என்று கூறியதும் அதிர்ச்சி அடைகிறான் தாமஸ்.. அந்த பெண்மணி தன் பெண்ணின் பெயரை உபயோகித்து தன் மகளின் போட்டோவை அனுப்பி சாட் செய்தார் என்பது தெரிய வருகிறது.. தாமஸ் குற்றத்தைக் ஒப்புக் கொண்டு தண்டனையை பெறுகிறான் என்று திரையில் எழுத்துக்கள் ஓட படம் முடிகிறது...உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரு தொலைக்காட்சி திரைப்படம்.. அறிவியலால் நமக்கு கிடைத்த சில அறிய விசயங்கள் நம் தவறான அணுகுமுறையால் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களை சரியான முறையில் கூறி உள்ளது இந்த திரைப்படம்.. தாமஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர் அந்த பெண் தன்னை நிராகரிக்கும் போதும், பிரைன் அந்த பெண்ணை சந்திக்க போகிறான் என்று தெரிந்து கோபம் கொள்ளும் போதும் உளவியல் ரீதியாக அவர் அடையும் உணர்வுகளை அழகாக வெளிபடுத்தியிருந்தார்... பின்னணி இசையும் சூழ்நிலையின் தாக்கத்தை உறுத்தாமல் பார்வையாளனுக்குள் கடத்துகிறது... தாமஸ் தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்ததும் கரோல் அதை மனமுதிர்ச்சியுடன் அணுகுவதும், தாமஸ் மீண்டும் அன்பாக பழகியதும் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வதும் என்று காட்சிகள் நன்றாக கையாளபட்டிருக்கின்றன... மிகவும் சிம்பிள் கதை... ஆனால் போரடிக்காத திரைக்கதையின் மூலம் ரசிக்கும் படி இருந்தது...  வாய்ப்பு கிடைத்தால் படம் பாருங்கள்... நிச்சயம் ரசிப்பீர்கள்....

Posted on முற்பகல் 3:09 by Elaya Raja

2 comments

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

"சொந்தமாக தொழில் தொடங்கி நடத்துவதென்பது நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் அல்ல.. அது ஒரு நீண்ட மராத்தான்... அதில் சளைக்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்... "- இன்போசிஸ் நாராயணமூர்த்தி.


சோர்ந்துக் கிடந்த மூளைக்கு க்ளுகோஸ் ஏற்றியதை போல் இருந்தது இன்போசிஸ் நாராயணமூர்த்தி பற்றிய இந்த புத்தகம்.. கிழக்கு பதிப்பகத்தில் இருந்து வெளிவரும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு எப்பொழுதும் சிறிய அளவிலான புத்தகங்களாகவே இருக்கும்.. ஆனால் ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தைப் போல் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கும்.... இன்போசிஸ் நாராயணமூர்த்தி பற்றிய இந்த புத்தகமும் என்.சொக்கன் அவர்களின் விறுவிறுப்பான எழுத்து நடையில் அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது... ஒரு மாபெரும் கணினி துறை சார்ந்த நிறுவனத்தின் சேர்மனாக இருப்பினும் கம்யூனிசம் சார்ந்த சிந்தனையால் மக்களுக்கு பயன்படும்படி அவர் சேவை புரிந்து வருவது மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம்... சொந்த தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல்.. உங்கள் தன்னம்பிக்கையின் அளவை இந்த நூல் சற்று உயர்த்திவிடும்... 

Posted on பிற்பகல் 9:56 by Elaya Raja

No comments