முதல் வரியிலேயே சொல்லி விடுகிறேன்.. படம் எனக்கு பிடிக்கவில்லை.. இதை படிக்கும் வாசக நண்பர்கள் ஏற்கனவே படம் பார்த்து அவர்களுக்கு பிடித்திருந்தால் "படம் நல்லா தானே இருக்கு... ஏன் இப்டி சொல்லுறான்.." என்று குழம்ப வேண்டாம்.. இது எனது ரசிப்புதன்மையின் குறைபாடே.. இந்த திரைப்படம் எனக்கு பிடிக்காமல் போனதற்கு எனது ரசிப்பு தன்மை மட்டும் காரணம் அல்ல.. திரைபடத்தை நான் பார்த்த சூழலும் ஒரு காரணம்.. எங்கள் ஊரில் உள்ள ஒரு திரையரங்கில் இந்த படத்தினை பார்த்தேன்.. சத்யம் அளவிற்கு சத்தியமாய் இருக்காது.. ஏதோ சுமாராகவே இருக்கும்.. ஆனால் இந்த முறை எல்லாமே படு மோசம்.. சவுண்ட் சிஸ்டம் மிக மோசமாகவே இருந்தது.. படத்தில் என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார்கள் என்றே முதல் அரை மணி நேரம் சுத்தமாக புரியவில்லை.. பிறகு அதுவே பழகி விட்டதால் சில இடங்களில் மட்டும் புரியவில்லை.. இது போதாது என்று ஜன்னல்கள் வேறு காற்றில் அடிக்கடி திறந்து கொண்டன.. நானே எழுந்து பொய் இரண்டு முறை மூடி விட்டு வந்தேன்... பிறகு வெறுத்து போய் அமர்ந்து விட்டேன்.. இதோடு முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிலர் படம் பிடிக்காமல் போனதால் சத்தம் போட்டு கொண்டே இருந்தார்கள்.. அதில் ஒரு பிரகஸ்பதி ( உபயம்: கல்கி ) தம் பற்ற வைத்து ஹாயாக ஊத ஆரம்பித்துவிட்டான்.. இத்தனை இடைஞ்சல்களால் தான் படம் உனக்கு பிடிக்காமல் போய் விட்டது என்று நினைக்கலாம்.. வேறு பல காரணங்களையும் இங்கே சொல்லி விடுகிறேன்... கதை நடக்கும் கால ஆண்டு எண்பதுகளின் பிற்பகுதி  நெடுஞ்சாலைகளில் வரும் லாரிகளில் ஏறி அதில் வரும் பொருள்களை தனது கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளை அடித்து சம்பாதிக்கும் ஹீரோ தார்பாய் முருகன் அந்த ஊருக்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டரிடம் பகை வளர்த்துக் கொள்கிறான்.. கொள்ளை அடிக்கும் பொருட்களை சொற்ப பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளும் ஏஜென்ட் இன்ஸ்பெக்டரிடம் பணம் கொடுத்து சரி செய்து விடுகிறார்.. ஆனாலும் தார்பாய் முருகனோடு மோதுவது இன்ஸ்பெக்டர்க்கு டைம் பாஸாக இருப்பதால் அதை விட முடியாமல் தொடர்கிறார்.. நெடுஞ்சாலையில் ஹீரோயின் நடத்தும் தாபா கடையில் சாப்பிடும் ஹீரோ பணம் தாராமல் எஸ்கேப் ஆக முயல ஹீரோயின் அவரை வீட்டினுள் அடைத்து வைத்து போலிசை கூட்டிவந்து விடுகிறார். இதனால் ஹீரோயினை வஞ்சம் தீர்க்க நினைக்கிறார் ஹீரோ.. இந்த சந்து இடைவெளியில் ஹீரோயினுக்கு பாதுகாப்பு தருவதாக சொல்லி ஹீரோயினை அடைய நினைக்கும் இன்ஸ்பெக்டரை ஹீரோயின் அசிங்க படுத்தி விட ஹீரோயின் மீது விபச்சார வழக்கு பதிவு செய்து அதற்க்கு சாட்சியாக ஹீரோவை கொண்டு வந்து நிறுத்துகிறார் இன்ஸ்பெக்டர்.. ஆனால் அவர் ஹீரோ இல்லையா..? அதனால் நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டரை மாட்டிவிட்டு ஹீரோயினை காப்பற்றி விடுகிறார்.. அப்புறம் என்ன..? வழக்கம் போல... ஹீரோவை ஸ்லோ மோசனில் சுற்றி சுற்றி வந்து மாண்டேஜ் சாங்கில் காதலிக்கிறார் ஹீரோயின்.. ஹீரோவும் ஏழு அல்லது எட்டு சீன் இருக்கும்.. அதன் பிறகு அவரும் காதலிக்க தொடங்குறார்.. அந்த பொல்லாத இன்ஸ்பெக்டர் ஹீரோவை பழிவாங்க பல முயற்சிகள் மேற்கொள்கிறார்...? அவரின் சதியிலிருந்து மீண்டாரா..?? ஹீரோயினுடன் சேர்ந்து அமைதியான வாழ்கை வாழ்ந்தாரா என்பதுதான் கிளைமாக்ஸ்... மன்னிக்கவும்.. இதைவிட சுருக்கமாக எனக்கு கதை சொல்ல வராது... வழக்கமாக விமர்சனம் எழுதும் போது இந்த பார்மேட்டை தான் பயன்படுத்துவார்கள்.. நான் கொஞ்ச நாட்களாக  இப்படி எழுதுவதை தவிர்த்து வந்தேன்... காரணம் கதையை எனக்கு சுருக்கமாக சொல்ல தெரியாது... 

சமீப காலமாக வித்தியாசமான திரைப்படங்களை ரசிகர்களுக்கு தரவேண்டும் என்று இயக்குனர்கள் மெனக்கெடுவதை நன்றாக உணர முடிகிறது.. அதற்க்கு அவர்கள் செய்யும் முதல் காரியம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்வது.. அப்படி வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்யும் அவர்கள் காட்சிகளை நகர்த்துவதற்கு பயன்படுத்துவது சினிமா கண்டிப்பிடிக்கபட்ட காலத்திலிருந்தே திரைத்துறையைக் காப்பாற்றி வரும் "காதல்".. வித்தியாசமான கதைக்கலங்களின் மூலம் இந்த படம் இதுவரை சொல்லப்படாத புதுவிதமான படம் என்று ரசிகனை நம்பவைக்க முயல்கிறார்கள்.. கழுகு, கும்கி வரிசையில் இப்பொழுது இந்த திரைப்படம்.. இதுவரை சொல்லபடாத கதையோ, சொல்லப்பட்ட கதையோ அது ரசிக்கும் படி சொல்லப்படுகிறதா என்று மட்டுமே நான் பார்ப்பேன்.. இந்த படம் எனக்கு ரசிக்கும் படி இல்லை...

சோபையான காட்சிகள்.. எந்த ஒரு காட்சியும் மனதில் நிற்கும் படி  இல்லை... வில்லனாக வரும் அந்த இன்ஸ்பெக்டரின் நடிப்பு கொட்டாவியைத்தான் கொடுத்தது.. சலீம் குமார் கதாபாத்திரம் நல்லவரா..? கெட்டவரா..? என்று விளங்கவே இல்லை... வில்லன் ஹீரோயினை காமப் பார்வை பார்பதைக் காட்டுவதற்காக ஹீரோயினை பிட்டு பட நடிகையை போல பல ஆங்கிளில்  காட்டிவிட்டார்கள் (அந்த காட்சிகளின் போது மட்டும் தியேட்டரில் படு அமைதி...) காமெடி என்று அவர்கள் முயற்சிக்கும் இடங்கள் எல்லாம் "ஏன்டா சவடிக்குறிங்க .." என்று கோபம் தான் வந்தது.. இயக்குனர் விஜயின் கம்பெனி ஆர்டிஸ்ட் ( தெய்வதிருமகள் படத்தில் நாசரின் உதவி ஆளாக இருந்து கொண்டு அனுஷ்கா கோஷ்டிக்கு உதவி செய்வாரே அவர் தான்) இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. மன்னிக்கவும்.. முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லி ஏமாற்றப்பட்டிருக்கிறார்.. அவர்தான் இந்த படத்தின் ப்ளாஷ்பேக் கதை சொல்லி.. அவர் இல்லாத இடத்தில் நடந்ததைக் கூட சொல்கிறார்.. ஹீரோ ஹீரோயின் இடையே நடந்த கில்மா காட்சிகளை கூட.. அவருடைய வயதான மேக்கப் செம்ம காமெடி.. வாயை வைத்துக் கொண்டு "ஆ" என்று பார்க்கும் போது குட்டி சைஸ் கிங்காங் போலவே தெரிந்தார்.. மழையில் ஹீரோ ஹீரோயின் ஆடும் போதே உடன் வந்த நண்பனிடம் "இது தான் மச்சான் கிளைமாக்ஸ் " என்று சொன்னேன்... கொய்யால அப்டியே நடந்து போச்சி... அதுவும் மொக்கைய சொல்லிட்டாங்க.. படத்துல எனக்கு பிடிச்சிருந்தது ஹீரோயினோட நடிப்பு.. ரொம்ப இயல்பா இருந்தது சில இடங்களில் மட்டும்..

"ஏய் நீ ரொம்ப அழகா இருக்க" திரைபடத்தில் ஒரு காட்சியில் விவேக் சொல்வார். "காதல் ஜோதினு  படத்துக்கு பேரு.. அதனால பயர்ல கிளைமாக்ஸ் வச்சிருக்கான்" என்று.. நெடுஞ்சாலைனு படத்துக்கு  பேரு அதனால நெடுஞ்சாலையிலேயே கிளைமாக்ஸ்.. போங்கடா நீங்களும் உங்க படமும்..

முதன்முறையாக ஒரு படம் பிடிக்காமல் போனதற்காக இவளோ பெரிய பதிவை எழுதி இருக்கேன்.. இன்னும் நிறைய இருக்கின்றன சொல்வதற்கு.. ஆனால் நேரமின்மையால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்..