மழைத்துளியாய் மனம் நனைத்து சென்றவளே....
கனவுகளிலும் காதல் விதைத்து நின்றவளே....
உன்னருகில் நானிருந்தால் உலகம் என்னை சுற்றுதடி..
கன்னி உன்னைப் பிரிந்து நின்றால் கைக் குழந்தையாய் மனம் கதறுதடி..
நீ விட்டுச் சென்ற பாதச் சுவடுகளெல்லாம்
என் முத்தத்தின் ஈரம் உள்ளது...
உன் மடி மீது தலை வைக்கும் நொடி தேடி
எந்தன் உயிரும் ஓடுது...
பனி சுமக்கும் நுனிப் புல்லாய்
கனத்துக் கிடக்கிறது என் இதயம்...
தழும்பி நிறையும் காதலோடு
காத்துக் கிடக்கிறது என் உணர்வும்....!
என் மெத்தையின் விரல்களெல்லாம்
நெருஞ்சி முள்ளாய் குத்துதடி...
உன் நினைவுகளை உணவாய் தின்று
கனவுகளும் என்னில் நீளுதடி...
கருப்பு வெள்ளை வானவில்லாய்
நான் காலம் கழித்த பொழுது....
வர்ணம் கொடுத்து எந்தன் வாழ்வை மாற்றிய
நீ ஒரு தேவதையின் உறவு....
நிழலெது நிஜமெது குழம்பித் தவிக்கிறேன் நித்தம்...
நீ இல்லாமல் போனால் நிஜமாய் சொல்கிறேன்
கல்லறையே எனக்கு சொர்க்கம்....!