வியாழன், 31 ஜனவரி, 2013

தமிழ் நண்பர்கள் என்ற வலை தளத்தில் நடைபெறும் கவிதை போட்டிக்காக நான் எழுதிய கவிதையின் இணைப்பை இங்கே கொடுத்துள்ளேன்...தோலின் நிறம் கருப்பாக உள்ள்ளதால் சில ஆண்களின் கேலிக்கு உள்ளாகும் சகோதரிகளின் மனக்குமுறாளாய் "வண்ணங்களை தொலைத்த வானவில்" என்ற தலைப்பில் நான் எழுதிய அந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் புள்ளிகளை(rating) அங்கே இட்டு செல்லுங்கள்...  நன்றி...

Posted on முற்பகல் 6:03 by Elaya Raja

2 comments

வியாழன், 10 ஜனவரி, 2013


"நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்துவிட்டால்..."

-என்று உரைத்து சென்ற பாரதியாரின் வரிகள் வருடங்கள் பல மறைந்தும் நம் ஒவ்வொருவரின் மனதிலும் குமுறிக்கொண்டிருக்கும் வரிகளே.. சில நாட்களுக்கு முன்பு உலக அரங்கில் இந்தியாவை தலைகுனியச் செய்த டெல்லி கற்பழிப்பு சம்பவம்.. எதற்கும் கலங்காத இதயங்களை கூட இரக்கப்பட வைத்த துயரம்.."மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்மம்மா.." என்ற வரிகள் பிறந்த நம் நாட்டில் ஒரு பெண்ணை ஒரு உயிரெனக் கூட கருதாமல் காமக் காட்டுமிராண்டிகள் நடத்திய அந்த கோரச் செயலின் வீரியம் மிக அதிகம். காமம் மட்டுமே என்பதை தாண்டி ஒரு வித சைகோ தனத்தை அந்த பெண்ணின் மீது நடத்திப் பார்த்திருக்கிறார்கள் அந்த காட்டு மிராண்டிகள். நாளிதழ்களிலும், வலை தளங்களிலும் அந்த சம்பவம் பற்றி படித்த பொழுது ஆண் என்ற வகையில் அவமானமாக உணர்ந்தேன். தினமும் நாளிதழைப் பிரிக்கும் பொழுது அந்த சகோதரி பிழைத்து விட வேண்டும் என்ற வேண்டுதலோடு திறந்தேன். வேண்டுதலோடு சிகிச்சையும் சேர்ந்து ஏமாற்றி விட காட்டு மிராண்டிகள் வாழும் பூலோகம் துறந்தாள் அந்த பெண். 

அந்த பெண்ணுக்காக வருத்தப்படுகிறேன் பேர்வழி என்று அறிக்கை விட்டு இலவச விளம்பரம் பெற்றுக் கொண்டார்கள் சில அரசியல் சாணக்கியர்கள். அவர்களில் எத்தனை பேர் தன் உள்ளம் நொந்து வருந்தினார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இன்னும் சிலர் பெண்கள் எப்படி ஆடைகள் உடுத்த வேண்டும் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் இன்னும் ஒரு படி மேலே பொய் " அந்த பெண் மீதும் தவறு இருக்கிறது... கற்பழிக்க வந்த ஆண்களிடம் நீங்கள் என் சகோதரர்கள் போல... தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று வேண்டிருக்க வேண்டும்.." என்று கூறி இருக்கிறார். அரிவாளை ஓங்கியவனிடம் அழுது புலம்பினால் ஆடு தப்பித்து விடுமாம்.. அவருக்கு வேண்டிய ஒருவருக்கு இது போல் நடந்தாலும் இதே கூற்றை கூறுவாரா அந்த பெரிய மனிதர்.. பெற்ற மகளை இழந்து தவிக்கும் அந்த பெற்றோரின் காயத்தில் வேல் வீசும் வார்த்தைகள் தான் இவைகள்..

பெண் என்பவளுக்கு நாமே சில வரையறைகளை கொடுத்துக் கொண்டோம். அந்த வரையறைகளை ஒரு பெண் மீறும் பொழுது அவள் மீதான நமது கண்ணோட்டமும் மாறுகிறது.. அது போன்ற கண்ணோட்டமே பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை துண்டிவிடுகின்றன.. 


இறந்த அந்த பெண்ணால் மற்ற இடங்களிலும் பெண்கள் மீது நடைபெறும் இது போன்ற பாலியல் வன்முறைகள் அரசாங்கத்தின் கவனம் பெற்றிருக்கின்றன என்பதே நாம் இங்கு ஆறுதல் பட்டு கொள்ள வேண்டிய விஷயம்.

தமிழகத்தில் நிலுவையில் உள்ள பாலியல் வன்முறை குற்றங்கள் சென்ற ஆண்டு மட்டும் ஏறக்குறைய 600 கும் மேல். இந்த ஆண்டுக்கும் எண்ணிகையில் சற்றும் குறைவில்லை.. தினமும் நாளிதழில் பெண் மீதான ஒரு பாலியல் குற்றம் இடம் பெற்று வருகிறது.. கேரளாவில் 10 வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற ஒருவனுக்கு மரண தண்டனை விதித்து இருக்கிறது கேரளா நீதிமன்றம்.. பெண்ணை வெறும் சதையாக மட்டுமே பார்க்கும் இது போன்ற காட்டுமிராண்டிகளை விசாரணை இன்றி தூக்கிலிட வேண்டும். தண்டனைகள் அதிமாகும் வரை இங்கு குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை..

Posted on முற்பகல் 8:24 by Elaya Raja

No comments