மறதி எனக்கு அதிகம் என்பதால் மாதவாரியாக என்னால் திரைப்படங்களை வரிசை படுத்திக் கூற இயலாது. ஆகவே இதை படிக்கும் பொது மக்கள் பொருத்தருள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். முதலில் என்னை ரசிக்க வைத்த சினிமாக்களை கூறிவிடுகிறேன். இதை படித்து விட்டு " யாரு டா இவன்.. இது ஒரு படம்... இத ரசிச்சேனு வேற சொல்றான்" என்று என் ரசனையில் இருந்து மாறுபாடும் நண்பர்கள் உங்கள் வசைகளை இந்த வலை தளத்தில் விட்டு செல்லுங்கள்...


ரசிக்க வைத்த சினிமாக்கள்:ஒரு கல் ஒரு கண்ணாடி:

லாஜிக் இல்லை, கதை இல்லை ஆனால் இரண்டரை மணி நேரமும் என்னை சிரிக்க வைத்த சினிமா. இரண்டு முறை என்னை காமெடிக்காகவே பார்க்க வைத்த படம்.  என்னை பொறுத்த வரை இந்த படம் எனக்கு "அட.. தேன்ன்ன்ன்ன்ன் அடை".

நான் ஈ: 

நிச்சயம் சொதப்ப தான் போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் சென்ற என்னை அசரவைத்த திரைப்படம். லாஜிக் இல்லாத கதையை கூட இயன்ற வரை லாஜிக்காண திரைக்கதை மூலம் சொல்லிய திரைப்படம்.


துப்பாக்கி:

விஜய் பிடிக்காத என்னை கூட விஜயை ரசிக்க வைத்த படம். கொடுத்த காசுக்கு கண்ணை காட்டி கலர்புல் வித்தை காட்டிய திரைப்படம். (இந்த படத்தின் கருத்தில் சில நண்பர்கள் மாறுபடலாம்..)

பீட்சா:

அருமையான கதை சொல்லும் விதத்தால் என்னை கட்டிப்போட்ட திரைப்படம்.

நடுவுல கொஞ்சம் பக்கத காணோம்:

வித்தியாசமான கதை, அதை மிக வித்தியாசமாக சொல்லிய விதம் இதன் முலம் என்னை கவர்ந்த படம். டைமிங் காமெடி மூலம் வெற்றி பெற்ற படம். படத்தின் நீளம் மட்டும் என்னை சற்று நெளிய வைத்தது.


வழக்கு என் 18/9:

எல்லோரும் ஆகா ஓஹோ என புகழ்ந்த திரைப்படம். என்னும் நண்பனும் அப்படியே கூறவே பெருத்த எதிர்ப்பார்ப்புடன் சென்றேன். ம்.. எனக்கும் பிடித்திருந்தது. ஆனால் ஆகா எனும் அளவிற்கு என் மனம் கவர வில்லை.

கும்கி:

வித்தியாசமான கதைக்களத்தால் என்னை கவர்ந்த படம். முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவிற்காக இருமுறை பார்த்தேன்.

வேட்டை:

வசூலில் பெரிய வெற்றி அடைய வில்லை. என் நண்பர்கள் சிலருக்கும் பெரிதாய் படம் பிடிக்கவில்லை. பழைய MGR  கதை என்று திட்டினார்கள். ஆனால் எனக்கு மட்டும் பிடித்திருந்தது. ஏன்..?

அட்டக்கத்தி:

புல் அண்ட் புல் காமெடி. ரசிக்க முடிந்தது ஒரு முறை மட்டும்.

நான்:

விறுவிறுப்பான திரைக்கதையால் எனக்கு பிடித்து போன படம்.

கலகலப்பு:

சிவா வின் காமெடி மிகவும் பிடித்தது. சில இடங்களில் என்னை கடித்தது..

தடையற தாக்க:

எனக்கு இது போன்ற action  படங்கள் என்றல் மிகவும் பிடிக்கும். அதனாலேயே இந்த படமும் பிடித்து போனது.

சுந்தரபாண்டியன்:

நல்ல காட்சி அமைப்புகளால் என்னை கவர்ந்த படம். முக்கியமாக வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

இவை தவிர நண்பன், காதலில் சொதப்புவது எப்படி, நீர்ப்பறவை, மனம் கொத்தி பறவை  போன்ற படங்களும் எனக்கு பிடித்திருந்தன..


என்னை ரணமாக்கிய திரைப்படங்கள்:

முகமூடி:

ரணமாக்கிய திரைப்படம் என்று யோசிக்கும் பொழுது சட்டென என் நினைவில் தோன்றும் படம் முகமூடி. அந்த அளவிற்கு என்னை காயப்படுத்திய திரைப்படம்.  நண்பனிடம் கடன் வாங்கி அந்த பணத்தில் சென்றேன். இப்பொழுது எழுதும் பொழுது கூட கண்ணீர் வருகிறது...

பில்லா 2:
எனக்கு அஜித் மிகவும் பிடிக்கும். கடைசியாய் வந்த மங்காத்தா பெரும் வெற்றி என்பதால் இந்த திரைப்படத்தை பெரிதும் எதிர் பார்த்தேன். ஆனால் என் பணம் பாழாய் போனது தான் மிச்சம். அஜித்தை தவிர படத்தில் ஒன்றுமே இல்லை.

சகுனி:

பழைய கதையை எடுத்து அதை அதை விட பழைய திரைக்கதையால் சொல்லி என்னை காய படுத்திய படம். சந்தானம் காமெடி மட்டும் சில சிரிக்க வைத்தது.

மாற்றான்:

நீண்ண்ண்ண்ட திரைக்கதையால் என்னை தூங்க வைத்த திரைப்படம்.

நீ தானே என் பொன் வசந்தம்:

இந்த திரைப்படத்தில் பிடித்த விசயங்களும் இருந்தன. பிடிக்காத சில விசயங்களும் இருந்தன. ஆனால் பிடித்ததை விட பிடிக்காதவையே அதிகம் என்பதால் இந்த லிஸ்ட் இல் சேர்க்கிறேன்.

முப்பொழுதும் உன் கற்பனைகள்:


"டேய் என்னடா நடக்குது" என என்னை புலம்ப வைத்த திரைப்படம். நானும் கடைசி காட்சி வரை இந்த சீன் நல்லா இருக்கும். கண்டிப்பா அடுத்து சீன் நல்லா இருக்கும் என்று எதிர்ப்பார்த்தே ஏமாந்து போனேன்..

தாண்டவம் :

தெய்வதிருமகள் டீமிடம் ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்து சென்று ஏமாந்து வந்தேன்.

அரவான்:

அங்காடித் தெரு வசந்தபாலனிடம் இப்படி ஒரு படத்தை எதிர் பார்க்கவில்லை. படம் முடிந்து வெளியில் வரும் பொழுது ஒரு சீரியல் பார்த்த அனுபவமே மிஞ்சியது.

நல்ல வேலை நான் என்ன புண்ணியம் செஞ்சேனோ இந்த வருஷம் தியேட்டர் ல கம்மியான மொக்க படங்கள் தான் பாத்திருக்கேன். இத அப்டியே maintain பண்ணு டா சுனா பானா.