திங்கள், 31 டிசம்பர், 2012

மறதி எனக்கு அதிகம் என்பதால் மாதவாரியாக என்னால் திரைப்படங்களை வரிசை படுத்திக் கூற இயலாது. ஆகவே இதை படிக்கும் பொது மக்கள் பொருத்தருள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். முதலில் என்னை ரசிக்க வைத்த சினிமாக்களை கூறிவிடுகிறேன். இதை படித்து விட்டு " யாரு டா இவன்.. இது ஒரு படம்... இத ரசிச்சேனு வேற சொல்றான்" என்று என் ரசனையில் இருந்து மாறுபாடும் நண்பர்கள் உங்கள் வசைகளை இந்த வலை தளத்தில் விட்டு செல்லுங்கள்...


ரசிக்க வைத்த சினிமாக்கள்:ஒரு கல் ஒரு கண்ணாடி:

லாஜிக் இல்லை, கதை இல்லை ஆனால் இரண்டரை மணி நேரமும் என்னை சிரிக்க வைத்த சினிமா. இரண்டு முறை என்னை காமெடிக்காகவே பார்க்க வைத்த படம்.  என்னை பொறுத்த வரை இந்த படம் எனக்கு "அட.. தேன்ன்ன்ன்ன்ன் அடை".

நான் ஈ: 

நிச்சயம் சொதப்ப தான் போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் சென்ற என்னை அசரவைத்த திரைப்படம். லாஜிக் இல்லாத கதையை கூட இயன்ற வரை லாஜிக்காண திரைக்கதை மூலம் சொல்லிய திரைப்படம்.


துப்பாக்கி:

விஜய் பிடிக்காத என்னை கூட விஜயை ரசிக்க வைத்த படம். கொடுத்த காசுக்கு கண்ணை காட்டி கலர்புல் வித்தை காட்டிய திரைப்படம். (இந்த படத்தின் கருத்தில் சில நண்பர்கள் மாறுபடலாம்..)

பீட்சா:

அருமையான கதை சொல்லும் விதத்தால் என்னை கட்டிப்போட்ட திரைப்படம்.

நடுவுல கொஞ்சம் பக்கத காணோம்:

வித்தியாசமான கதை, அதை மிக வித்தியாசமாக சொல்லிய விதம் இதன் முலம் என்னை கவர்ந்த படம். டைமிங் காமெடி மூலம் வெற்றி பெற்ற படம். படத்தின் நீளம் மட்டும் என்னை சற்று நெளிய வைத்தது.


வழக்கு என் 18/9:

எல்லோரும் ஆகா ஓஹோ என புகழ்ந்த திரைப்படம். என்னும் நண்பனும் அப்படியே கூறவே பெருத்த எதிர்ப்பார்ப்புடன் சென்றேன். ம்.. எனக்கும் பிடித்திருந்தது. ஆனால் ஆகா எனும் அளவிற்கு என் மனம் கவர வில்லை.

கும்கி:

வித்தியாசமான கதைக்களத்தால் என்னை கவர்ந்த படம். முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவிற்காக இருமுறை பார்த்தேன்.

வேட்டை:

வசூலில் பெரிய வெற்றி அடைய வில்லை. என் நண்பர்கள் சிலருக்கும் பெரிதாய் படம் பிடிக்கவில்லை. பழைய MGR  கதை என்று திட்டினார்கள். ஆனால் எனக்கு மட்டும் பிடித்திருந்தது. ஏன்..?

அட்டக்கத்தி:

புல் அண்ட் புல் காமெடி. ரசிக்க முடிந்தது ஒரு முறை மட்டும்.

நான்:

விறுவிறுப்பான திரைக்கதையால் எனக்கு பிடித்து போன படம்.

கலகலப்பு:

சிவா வின் காமெடி மிகவும் பிடித்தது. சில இடங்களில் என்னை கடித்தது..

தடையற தாக்க:

எனக்கு இது போன்ற action  படங்கள் என்றல் மிகவும் பிடிக்கும். அதனாலேயே இந்த படமும் பிடித்து போனது.

சுந்தரபாண்டியன்:

நல்ல காட்சி அமைப்புகளால் என்னை கவர்ந்த படம். முக்கியமாக வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

இவை தவிர நண்பன், காதலில் சொதப்புவது எப்படி, நீர்ப்பறவை, மனம் கொத்தி பறவை  போன்ற படங்களும் எனக்கு பிடித்திருந்தன..


என்னை ரணமாக்கிய திரைப்படங்கள்:

முகமூடி:

ரணமாக்கிய திரைப்படம் என்று யோசிக்கும் பொழுது சட்டென என் நினைவில் தோன்றும் படம் முகமூடி. அந்த அளவிற்கு என்னை காயப்படுத்திய திரைப்படம்.  நண்பனிடம் கடன் வாங்கி அந்த பணத்தில் சென்றேன். இப்பொழுது எழுதும் பொழுது கூட கண்ணீர் வருகிறது...

பில்லா 2:
எனக்கு அஜித் மிகவும் பிடிக்கும். கடைசியாய் வந்த மங்காத்தா பெரும் வெற்றி என்பதால் இந்த திரைப்படத்தை பெரிதும் எதிர் பார்த்தேன். ஆனால் என் பணம் பாழாய் போனது தான் மிச்சம். அஜித்தை தவிர படத்தில் ஒன்றுமே இல்லை.

சகுனி:

பழைய கதையை எடுத்து அதை அதை விட பழைய திரைக்கதையால் சொல்லி என்னை காய படுத்திய படம். சந்தானம் காமெடி மட்டும் சில சிரிக்க வைத்தது.

மாற்றான்:

நீண்ண்ண்ண்ட திரைக்கதையால் என்னை தூங்க வைத்த திரைப்படம்.

நீ தானே என் பொன் வசந்தம்:

இந்த திரைப்படத்தில் பிடித்த விசயங்களும் இருந்தன. பிடிக்காத சில விசயங்களும் இருந்தன. ஆனால் பிடித்ததை விட பிடிக்காதவையே அதிகம் என்பதால் இந்த லிஸ்ட் இல் சேர்க்கிறேன்.

முப்பொழுதும் உன் கற்பனைகள்:


"டேய் என்னடா நடக்குது" என என்னை புலம்ப வைத்த திரைப்படம். நானும் கடைசி காட்சி வரை இந்த சீன் நல்லா இருக்கும். கண்டிப்பா அடுத்து சீன் நல்லா இருக்கும் என்று எதிர்ப்பார்த்தே ஏமாந்து போனேன்..

தாண்டவம் :

தெய்வதிருமகள் டீமிடம் ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்து சென்று ஏமாந்து வந்தேன்.

அரவான்:

அங்காடித் தெரு வசந்தபாலனிடம் இப்படி ஒரு படத்தை எதிர் பார்க்கவில்லை. படம் முடிந்து வெளியில் வரும் பொழுது ஒரு சீரியல் பார்த்த அனுபவமே மிஞ்சியது.

நல்ல வேலை நான் என்ன புண்ணியம் செஞ்சேனோ இந்த வருஷம் தியேட்டர் ல கம்மியான மொக்க படங்கள் தான் பாத்திருக்கேன். இத அப்டியே maintain பண்ணு டா சுனா பானா.
Posted on முற்பகல் 6:47 by Elaya Raja

No comments

வியாழன், 27 டிசம்பர், 2012

கதை 

ஆதிக்காடு என்ற மலையோர கிராமத்துக்குள் புகுந்து அடிக்கடி உயிர்சேதம் செய்யும் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்டாமல் அங்கு வாழும் மக்களை விரட்டப் பார்க்கிறது அரசாங்கம். அதனால் அரசாங்கத்தின் உதவியை உதறிவிட்டு தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள காட்டு யானைகளை விரட்டுவதற்கு பயிற்சிப் பெற்ற கும்கி யானை ஒன்றினை ஏற்ப்பாடு செய்ய முடிவெடுக்கிறார்கள் ஊர்மக்கள். கும்கி யானையை கொண்டுவர வேண்டிய நபர் தன் குடும்ப பிரச்சனையால் வர முடியாமல் போக அவர் வரும் வரை ஊர் மக்களை சமாளிக்க கும்கி யானை என்று பொய் சொல்லி கோவில் யானை மாணிக்கத்துடன் ஊருக்குள் நுழைகிறார்கள் விக்ரம் பிரபு, தம்பி ராமையா மற்றும் ஒரு உதவியாளர். வந்த இடத்தில ஊர் தலைவரின் மகள் லக்ஷ்மி மேனனை கண்டதும் காதலில் விழும் விக்ரம் பிரபு அங்கேயே தங்க முடிவெடுத்து கோவில் யானையை கும்கி யானையை மாற்ற முயற்சிக்கிறார். அவரின் முயற்சி பலித்ததா..? கோவில் யானை மாணிக்கம் கொம்பன் என்ற காட்டு யானையை கொன்று ஊர் மக்களை காப்பாற்றியதா...? விக்ரம் பிரபுவின் காதல் கை கூடியதா...? என்ற கேள்விகளுக்கு விடையே கும்கி....


நடிப்பு 

நடிகர் திலகம் வீட்டில் இருந்து கிளம்பி இருக்கும் விக்ரம் பிரபு முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு தன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிருக்கிறார். ஆனால் நடிப்பதற்கு பெரிதும் வாய்ப்பில்லாத காட்சி அமைப்புகள் தான் அவருக்கு. பாகனாக அவர் தன் யானை மீது காட்டும் பாசமும் தந்தங்களை பிடித்து கொண்டு தண்டால் எடுப்பதும் அவரை பாகனகவே நம் கண் முன் நிறுத்துகிறது. ஊர் தலைவர் மகள் அல்லியாக சுந்தரபாண்டியனில் மிகை இல்லாத தன் நடிப்பாலும் அழகாலும் நம் மனம் கவர்ந்த லக்ஷ்மி மேனன். வித்தியாசமான சிகை அலங்காரமும் ஆடை உடுத்தாலும் அவரின் முந்தைய படத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இவருக்கும் நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை என்றாலும் கிடைத்த காட்சிகளை நன்றாக பயன்படுத்திருக்கிறார். பிரபு சாலமன் கதையை விட பெரிதும் நம்பி இருப்பது தம்பி ராமையாவை தான் போலும் என என்னும் அளவிற்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். நிறைய காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் பேசிய வசனங்களையே மீண்டும் மீண்டும் பேசி வெறி ஏற்றுகிறார். பெரும்பாலும் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் மைண்ட் வாய்ஸ் இல் தான் ஓடுகிறது. நாயகனை விட இவர் பேசும் வசனங்கள் தான் அதிகம். ஊர் தலைவராக வருபவரின் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. மாணிக்கத்தின் ( யானை) நடிப்பும் கச்சிதம்.


பிடித்தவை 

1. மாணிக்கம் என்ற யானையை பயன்படுத்தி சில காட்சிகளை நன்றாக அமைத்திருப்பது. உதாரணமாக தண்ணிக்குள் விழ போகும் லக்ஷ்மி மேனனை யானை தாங்கி பிடிக்கும் காட்சி. பலரது கைதட்டல்களை பெற்றது.

2. இமானின் பாடல்களும் பின்னணி இசையும். மைனாவை விட இதன் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

3. சுகுமாரின் ஒளிப்பதிவு. படத்தின் நாயகன் இவர் தான் என்று அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். குறிப்பாக சொல்லிட்டாளே பாடலில் அருவியை படமாக்கிருக்கும் காட்சி. பலத்த பாராட்டுக்கள்.

4. தம்பி ராமையாவின் நகைச்சுவை. டைமிங் வசனங்களால் நம்மை பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். மைனாவை விட இதில் அவரின் பங்கு அதிகம்.


பிடிக்காதவை 

1. விக்ரம் பிரபு காதலித்துக் கொண்டே இருப்பது. "சீக்கிரம் போய் லவ் பண்றேன்னு சொல்லுங்க பாஸ்" என்று நாம் பொலம்பும் அளவிற்கு காதலித்துக் கொண்டே இருக்கிறார்.

2. கொம்பன் என்ற காட்டு யானைக்கு பில்டப் கொடுத்து கொண்டே இருப்பது.

3. என்ன தான் ரசிக்கும் படி இருந்தாலும் தம்பி ராமையா பேசிக்கொண்டே இருப்பது நம்மை பொறுமை இழக்க செய்கிறது சில இடங்களில். அதுவும் எல்லா வசனங்களும் மைண்ட் வாய்ஸ்இல் ஓடுவது நம்மை சலிப்படைய செய்கிறது.


4. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாமல் போவது.

5. எப்ப வரும் எப்ப வரும் என்று நாம் எதிர்ப்பார்த்து கிடக்கும் கொம்பன் என்ற காட்டு யானைக்கும் மாணிக்கம் என்ற கோவில் யானைக்கும் நடக்கும் சண்டை காட்சி இறுதியில் சப்பென்று முடிவது.

ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்

பாடல் காட்சிகளிலும் நகைச்சுவை காட்சிகளிலும் கைதட்டல்கள் நிறையவே கேட்டன. இரு யானைகளுக்கு இடையிலான சண்டை காட்சியை ஏதோ பெரிய ஹீரோ சண்டை செய்வதை போல ஆரவாரத்துடன் ரசித்தார்கள்.

கடைசியா ஒரு வார்த்தை 

மைனா அளவிற்கு நம் மனதை பாதிக்கவில்லை என்றாலும் கொடுத்து காசுக்கு நம்மை திருப்திபடுத்திருக்கிறது இந்த கும்கி.


Posted on முற்பகல் 7:06 by Elaya Raja

No comments

திங்கள், 24 டிசம்பர், 2012

கதை

சின்ன புள்ளையா இருக்கும் போது friends ah  இருக்குற ஜீவா, சமந்தா ரெண்டு பேரும் ஒரு சின்ன பிரச்சனையால பிரிஞ்சிடுறாங்க. கொஞ்சம் வருஷம் கழிச்சி ஒரே ஸ்கூல்ல மீட் பண்ணிகுற ரெண்டும் பேரும் நட்பாகி பின்பு வழக்கம் போல காதலாகுறாங்க. சின்ன ஈகோ பிரச்சனையால சண்டை போட்டு பிரியுற இவங்க கொஞ்சம் வருஷம் கழிச்சி மறுபடியும் ஒரு காலேஜ் function ல மீட் பண்ணி லவ் ரிநீவல் பண்றாங்க. அப்புறம் மறுபடியும் சண்டை போட்டு பிரிஞ்சிடுற ஜோடி's  சேர்ந்தாங்கலா அப்டிங்கறத நீங்களே பாத்து தெரிஞ்சிகோங்க.

நடிப்பு 

சமந்தாவுக்கு சரியான படம். நடிக்க செம்ம வாய்ப்பு. நல்லா பயன்படுத்திகிட்டாங்க. அவங்க காட்டுற சின்ன சின்ன reactions சூப்பர். ரொம்ப அழகு. அதுவும் அந்த ஸ்கூல் படிக்குற பொன்னா வரும் போது அழகு, நடிப்பு ரெண்டும் அள்ளுது. (கொஞ்சம் ஓவரா புகழுறேனோ..?).  ஜீவா இத விட நிறைய படங்கள்ல நல்லவே நடிச்சி இருக்காரு. அதோட ஒப்பிட்டா இதுல நடிக்குற வாய்ப்பு பெருசா இல்லன்னு தான் சொல்லணும். சந்தானம் வழக்கமான அதே ஒன லைன் காமெடீஸ் தான். நல்லா தான் இருக்கு. ஆனா அந்த விண்ணை தாண்டி வருவாயா ரீமேக் கொஞ்சம் கடி தான். நடிச்சிருக்காங்கன்னு சொல்ற அளவுக்கு வேற யாரும் படத்துல இல்லங்க.

புடிச்சது

1. இளையராஜா பாடல்கள். ஒவ்வொரு பாட்டும் சூப்பர். 
2. சமந்தா பொண்ணு. என்னா அழகு. ஒவ்வொரு பிரேமும் அழகு. 
3. சந்தானம் காமெடி ( சில இடங்கள்ள மட்டும்)
4. வசனங்கள். நல்ல ரசிக்கும் படி தான் இருக்கு.

புடிக்காதது 

1. இளையராஜா பாடல்கள். பாட்டு நல்லா தான் இருக்கு. அதுக்காக எட்டு பாட்டா...? இந்த எட்டு பாட்டு பத்தாதுன்னு ஒரு குட்டி ரீமிக்ஸ் பாட்டு வேற. ஒரு வேல சன் மியூசிக் பாத்துட்டு இருக்கோமோனு டவுட் கூட வந்துடிச்சி. 

2. நீளநீளமான வசனங்களும் காட்சிகளும். நிஜமாவே காதலிக்குரவங்க ரொம்ப நேரம் சண்டை போடுவாங்க தான். அதுக்குனு அரை மணி நேரத்துக்கு சண்டையே போட்டுக்கிட்டு இருந்தா எப்டிங்க நைட் ஷோ ல தூக்கத்த கன்ட்ரோல் பண்றது.

3. இங்கிலிஷ்லையே dialogues வைக்குறது. இது தமிழ் படம் MR. கௌதம். அத அப்பப்ப மறந்துடுரிங்க போல.

audience ரெஸ்போன்ஸ்

படம் நல்லா இருக்கும்னு நம்பி தன் நண்பர்களையும் கூட்டி போன என்ன மாதிரி நல்லவங்க கெட்ட கெட்ட வார்த்தைல திட்டு வாங்குனாங்க அவங்க பிரிண்ட்ஸ் கிட்ட. இன்னும் கொஞ்சம் பேர் உக்கிரம் ஜாஸ்தி ஆகி சத்தம் போட்டு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. 

கடைசியா கொஞ்சம் வார்த்தை

டிக்கெட் கிடைக்காம இருந்த போதே ஓடி போயிருக்கலாம். பிளாக் ல  வாங்கிட்டு போய் படத்த பாத்து இப்டி ப்ளாக் ல பொலம்ப வேண்டிய நிலைமை வந்துடிச்சி.


Posted on முற்பகல் 6:34 by Elaya Raja

No comments

வியாழன், 13 டிசம்பர், 2012

விபத்துகள் என்பவை தவிர்க்கப்பட முடியாதவை தான். ஆனால் விபத்துகள் நடப்பதற்க்கான சாத்தியங்களை நாமே ஏற்படுத்திடக்கூடாது. இரண்டு நாட்களுக்கு முன் சென்னை கந்தன்சாவடி அருகே ஒரு விபத்து. பேருந்து படிக்கட்டில் நின்று  பயணம் செய்த 4 மாணவர்களின் மீது பேருந்துக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மோதியதில் ஒரு மாணவன் உயிரிழந்தான். மீதி 3 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். 10 நாட்க்களுக்கு ஒருவர் சென்னையில் விபத்தின் மூலம் உயிரிழக்கிறார் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்த விபத்தில் யார் மீது தவறு. பின்னால் நகரும் லாரியின் மீது மோதிவிடாமல் தடுக்கத் தவறிய பேருந்து ஓட்டுனர் மீதா..? பின்னால் நின்ற பேருந்தை கவனிக்காமல் லாரியை இயக்கிய லாரி ஓட்டுனர் மீதா...? அல்லது படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த மாணவர்கள் மீதா..? 70 பேர் பயணம் செய்யக்கூடிய பேருந்தில் 120 பேரை ஏற்றிய நடத்துனர் மீதா..?குறிப்பிட்ட சில ஏரியாக்களில் பேருந்து போக்குவரத்து குறைவாக இருப்பதே இது போன்ற ஓவர் லோடு பயணங்களுக்கு காரணம். கூட்ட நெரிசலால் சிலர் படிகளில் நின்று பயணம் செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். சென்னையை விட கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் தொகை குறைவாக உள்ள பெங்களூரில் ஏறக்குறைய 5000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சென்னையில் வெறும் 3607 பேருந்துகள் மட்டுமே இயக்கபடுகின்றன. பேருந்து கட்டணத்தை மட்டுமே ஏற்றிக்கொண்ட அரசாங்கம் பேருந்துகளின் எண்ணிக்கையை ஏற்ற தவறிவிட்டது. படியில் பயணம் செய்து மரணம் தேடிக்கொள்ளும் வேலையை சில மாணவர்கள் தானாகவே செய்கிறார்கள். பேருந்து நிற்கும் பொழுது ஏறமாட்டார்கள். பேருந்து கிளம்பியதும் ஓடிப்போய் படியில் ஏறிக்கொள்வதை ஒரு ஹீரோயிசம் என்றே எண்ணிக்கொள்கிறார்கள் . பருவத்தில் இதுபோன்று மாணவர்கள் செய்வது சகஜம் தான். அதற்காக பாதுகாப்பை மறந்துவிடலாமா..? 

இது போன்ற விபத்துகளை அரசாங்கம் கொண்டுகொள்ளமலா இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். கண்டுகொண்டுதான் இருக்கிறது. இரண்டு நாட்க்களுக்கு முன் நடந்த இந்த விபத்தினால் படியில் பயணம் செய்யும் பயணிகளை பிடித்து அபராதம் வசூலிக்கிறார்கள். இதற்காவே முக்கியமான பேருந்து நிலையங்களில் 3 போலீசார்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கல்லூரிகளும் பள்ளிகளும் மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்கம் படி அரசாங்கத்தை கூறி இருக்கின்றன. மகளிர் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாய் அறிவிக்கபட்டிருக்கின்றன. 

இதற்க்கு முன்பும் இது போன்று நிறைய விபத்துகள் நடந்திருக்கின்றன. அரசாங்கம் அப்போது இது போன்ற முன்னேர்ப்பாடுகளை செய்யவில்லையா என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். முன்னேர்ப்பாடுகளை திட்டமிடும் அரசாங்கம் அதை செயல்படுத்தும் விதத்தில் தோல்வி பெறுவதே இது போன்ற விபத்துகள் தொடர்வதற்கு காரணம். பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து ஒரு சிறுமி உயிரிழந்ததும் எல்லா பள்ளிகளின் பேருந்துகளும் சரியான நிலையில் இருக்கிறதா என்று ஆராய்ந்தன. இன்னும் இந்த சோதனை நடைமுறையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. இதுபோலவே எல்லாவற்றிலும் நடக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது இங்கு அந்த விபத்தின் வீரியம் மக்களிடையே குறையும் வரை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இதே போக்கு இந்த முறையும் நீடிக்குமே ஆனால் இது போன்ற விபத்துகளும் இங்கே தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

Posted on முற்பகல் 6:39 by Elaya Raja

1 comment

புதன், 12 டிசம்பர், 2012


அபூர்வ ராகத்தில் பிறந்த எங்கள் அதிசய பிறவியே...
எளிமை என்ற சொல்லின் எஜமானே...!
வியர்வைத்துளிகளை விதைத்து வெற்றிகளை ருசித்த வீரா..!
எதிரிகளைக்கூட ஏற்றிவிடத் துடிக்கும் எந்திரனே...!
தலைவா என்று உன்னை அழைப்பதில் தலைக்கனம் கொள்கிறோம் நாங்கள்...!
திரையில் உன் பிம்பம் காணும் பொழுதெல்லாம் தித்திக்கும் எங்கள் நிமிடங்கள்...!
கைவிரல் அசைத்து நீ வார்த்தைகள் உதிக்கும் அழகில் வசியம் பெறும் உன்னை வாசிக்கும் எங்கள் விழிகள்..!
அகவை உனக்கு அறுபதை தாண்டினாலும் அழகு தான் நீ என்றும் எங்களுக்கு...!
மறுபிறவி ஒன்று இருந்தால் மன்னன் நீ மீண்டும் வர வேண்டும்..!
எங்கள் மனங்களை ஆள வேண்டும்...!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா..!!

Posted on முற்பகல் 2:07 by Elaya Raja

1 comment

திங்கள், 10 டிசம்பர், 2012

நறுக்குத் தெறிக்கும் வசனங்களால் என்னை ரசிக்க வைத்த திரைப்படம். செத்து மடியும் மீனவ சமுதாயத்துக்காக திரையில் கொஞ்சமேனும் முயற்சி செய்திருக்கும் ஒரு திரைப்படம். வெறும் வியாபாரத்திற்காக இந்த கருவை கையாண்டு இருப்பினும் படம் பார்க்கும் அந்த நிமிடங்கள் நம்மில் ஒரு கேள்வியை இந்த திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. வாழ வழி தேடிச் செல்லும் மீனவன் வாழ்வை தொலைத்து விடுகிறான். காலம் காலமாக நாம் செய்திதாள்களில் படித்து வரும் ஒரு விஷயம். ஆம் நமக்கு வெறும் விஷயம் என்ற அளவோடு முடிந்து விடுகிறது. கண்ணீர் துளிகள் மட்டுமே அவர்களின் காலம் முழுவதும் கூடவே வருகிறது. அந்த வலியை இந்த திரைப்படம் முழுவதும் பதிவு செய்யவில்லை என்றாலும் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டும் படி இருக்கிறது..விஷ்ணு கொடுத்த கதா பாத்திரத்திற்கு நிறைவு கொடுத்திருக்கிறார். குடித்துவிட்டு அலைவதாகட்டும் திருந்தி மீனவனாக மாற துடிப்பதாகட்டும் நடிப்பு கச்சிதம்.  சுனைனா, சரண்யா பொன்வண்ணன், "பூ" ராம், தம்பி ராமையா, வடிவுக்கரசி, பாண்டி அனைவரின் நடிப்பும் காட்சிகளின் சுவாரசியத்திற்கு கூடுதல் பலம். சமுத்திரக்கனி சில காட்சிகளே வந்தாலும் அவரின் நடிப்பும் பேசும் வசனங்களும் படம் முடிந்த நாம் மனதில் நிற்கின்றன..

பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் அருமை. குறிப்பாக " யார் வீட்டு மகனோ" ," பர பர" ஆகிய பாடல்கள். ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம். சில காட்சிகள் நம்மால் யூகிக்கும் படியே இருப்பது குறையே. சீனு ராமசாமி எடுத்து கொண்ட களமும் அதை சொல்லி இருக்கும் விதமும் அவரின் அடுத்த படம் பற்றிய எதிர்ப்பார்ப்பை தூண்டி இருக்கிறது... சுனைனா வயதானதும் நந்திதா தாஸாக மாறுவது தான் கடைசி வரை எனக்கு நெருடலாகவே இருந்தது.. அது எப்டிங்க...? 

Posted on முற்பகல் 7:25 by Elaya Raja

No comments

வித்தியாசமான தலைப்பினால் என்னில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம். தலைப்பை வைத்து நிச்சயம் படமும் ஒரு வித்தியாசமான கதைகளத்துடன் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பை முழுவதுமாக நிவர்த்தி செய்தது இந்த "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படம். மிகவும் எளிமையான கதைக்களம். ஆனால் அதை சொல்லி இருக்கும் விதம் நிச்சயம் ரசிக்கும்படியே உள்ளது.திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் தருணத்தில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாட செல்லும் நாயகன் கால் இடறி கீழே விழுகிறான். அப்படி விழும் பொழுது பின் தலையில் அடிபட சமீபகால நினைவுகளை மறந்து விட அதன் பின் நடக்கும் சுவாரசியங்களே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். என்னை பொறுத்த வரை இந்த திரைப்படம் ஒரு நேர்மையான முயற்சி. திரைபடத்தின் சுவாரசியத்திற்காக எந்த வித திருப்பங்களையும் சேர்க்காமல் உண்மையாகவே நம் நண்பன் ஒருவனுக்கு இந்த நிலைமை நேர்ந்தால் என்ன செய்வோமோ அப்படியே நகர்கிறது காட்சிகள்.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி நன்றாக செய்திருக்கிறார். அவரின் சமீபத்திய வெற்றியான பீட்சாவை போலவே இந்த படத்தையும் தன் நடிப்பால் தூக்கி நிறுத்திருக்கிறார். அவர் "என்னாச்சி.. கிரிக்கெட் விளையாண்டோம்.. நீ தானே அடிச்ச.." என்று ஒவ்வொரு முறை ஆரம்பிக்கும் போதும் நமக்கு எழும் ஒரு கோவமே அவர் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி எனலாம்... விஜய் சேதுபதி வரும் காட்சிகளை விட அவரின் நண்பர்களாக வரும் அந்த மூவர் வரும் காட்சிகளே அதிகம். அருமையாக செய்திருக்கிறார்கள். அதுவும் பச்சி என்கிற பாலாஜியாக வரும் நபர் காட்டும் முகபாவங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன... நாயகிக்கு அதிக வேலை இல்லை என்றாலும் வரும் காட்சிகளை நிறைவாகவே செய்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படியான காட்சிகள் ஏராளம்.. Reception காட்சியில் விஜய் சேதுபதி "ப்பா! யாருடா இந்த பொண்ணு.. பேய் மாதிரி இருக்கா.." எனும் போது நம்மால் சிரிப்பை அடக்காமல் இருக்க முடியவில்லை.  படமாக்கப்பட்ட location நாம் பார்த்து பழகிய இடங்கள் போலவே இருப்பதால் ஒரு படம் பார்த்த உணர்வை தராமல் சம்பவங்களை நேரில் நின்று பார்த்ததை போன்ற ஒரு உணர்வே தோன்றியது. ஒளிப்பதிவும் கனகட்சிதம். சின்ன சின்ன timing வசனங்களால் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் புது முக இயக்குனர் பாலாஜி தரணிதரன். Reception காட்சியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். நன்றாக இருப்பினும் நம் பொறுமையை கொஞ்சம் சோதிக்கிறது அந்த காட்சிகள்.

கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று படம் பார்க்க வருபவர்களை கொல்லாமல் கொடுத்த காசுக்கு மனம் முழுதும் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வாய்த்த இந்த "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" மிஸ் பண்ண கூடாத ஒரு திரைப்படம்..

Posted on முற்பகல் 5:40 by Elaya Raja

No comments